Tuesday, March 19, 2024
மேலும்
  Homeசெய்திகள்இந்தியாகுழந்தைகள் உட்பட 8 பேரை உயிருடன் எரித்த கொடூரம் : வழக்கை சிபிஐக்கு மாற்றியது உயர்...

  குழந்தைகள் உட்பட 8 பேரை உயிருடன் எரித்த கொடூரம் : வழக்கை சிபிஐக்கு மாற்றியது உயர் நீதிமன்றம்

  மேற்குவங்காளத்தில் குழந்தைகள் உட்பட 8 பேரை எரித்துக்கொன்ற வழக்கை, மத்திய அரசிடம் ஒப்படைக்கக்கூடாது என்ற மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் கோரிக்கையை மறுத்து வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது கொல்கத்தா உயர்நீதி மன்றம். 

  கொல்கத்தா மாநிலம் பிர்புர் மாவட்டத்தில் உள்ள ரம்புராட் பகுதியின் பஞ்சாயத்துத் தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் அப்பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் 2 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உட்பட சுமார் 8 பேர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர். அவர்களின் உடலை பிரதேசப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்களை உயிருடன் எரிப்பதற்கு முன் கடுமையாகத் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. 

  இந்த கோரசம்பவத்தை எதிர்த்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். இந்தப் பிரச்சினை தேசிய மகளிர் ஆணையத்தின் கவனத்துக்குச் சென்றது. உடனே மேற்கு வங்காள மாநில டிஜிபி மனோஜ் மாளவியாவுக்கு கடிதம் எழுதியிருக்கும் ரேகா ஷர்மா இது மிகவும் கொடுமையான சம்பவம் ஆகும். அப்பகுதி பெண்களின் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடு செய்யாத காவல்துறையை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார். 

  இதுவரை இவ்வழக்கில் 22 பேர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறை தரப்பில் பெட்ரோல் குண்டுகளை வீசி இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்டவர்களில் பாதுஷேக்கின் மகன்களும் உள்ளனர் என்று அவரது உறவினர்கள் தெரிவித்து இருந்தனர். 

  மேலும், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய தடவியல் அறிஞர்கள் விபத்து நடந்த வீட்டை ஆராய்ந்து வருகின்றனர். இதுபற்றிய உண்மைகளைக் கண்டறிய கூடுதல் தலைமை அதிகாரி ஞானவந்த் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

  இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சம்பவ இடத்துக்கு நேரில் விரைந்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றத்துக்கு காரணமாக இருந்த ராம்புராட் பகுதியின் வட்டார திரிணாமுல் காங்கிரசின் தலைவர் அனருல் ஹுஸைனை கைது செய்ய உத்தரவிட்டார். 

  இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. அப்பொழுது, தானாகவே வந்து முன்வந்து வழக்கை கையிலெடுத்து விசாரணை செய்தது கொல்கத்தா உயர்நீதிமன்றம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ் ஸ்ரீவத்சவா மற்றும் ஆர் பரத்வாஜ் அடக்கிய குழு, வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்தது. மேலும், ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் இந்த வழக்கு சம்பந்தமான குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளது நீதிமன்றம்.

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....