Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஆழமான அதிரடி அனுபவத்தை தர வரும் 'கே.ஜி.எஃப் - சாப்டர் 2' !

    ஆழமான அதிரடி அனுபவத்தை தர வரும் ‘கே.ஜி.எஃப் – சாப்டர் 2’ !

    கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் கே.ஜி.எஃப் – சாப்டர் 1. யாரும் எதிர்பார்க்காத வெற்றியை இத்திரைப்படம் பெற்றது. தமிழ், தெலுங்கு என பான் இந்திய திரைப்படமாக வெளியானது,  கே.ஜி.எஃப் முதல் பாகம்! 

    kgf 1

    இசை, வசனம் என படத்தின் சகலமும் ரசிகர்களுக்கு பிடித்துப்  போக, 2018-ம் ஆண்டிலேயே கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என கேள்விகள் தொடங்கியது.

    kgf 2

    இந்நிலையில், வருகிற ஏப்ரல் 14-ம் தேதி ‘கே.ஜி.எஃப் – சாப்டர் 2’ படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திரைப்படத்தின் சில போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    தற்போது கே.ஜி.எஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீணா தாண்டன் டப்பிங் பேசியபோது எடுத்தப் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு, ஆழமான அதிரடி அனுபவத்திற்கு தயாராக இருங்கள் என்று கூறியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஏப்ரல் மாதம் திரைப்படம் திரைக்கு வருகிறது என்பதால் படத்தின் ப்ரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தளபதி விஜய் அவர்களின் பீஸ்ட் திரைப்படமும், ‘கே.ஜி.எஃப் – சாப்டர் 2’ திரைப்படமும் மோதவிருக்க அதீத வாய்ப்புகள் இருப்பதாக அறியப்படுகிறது. பீஸ்ட் திரைப்படத்தின் ரீலிஸ் தேதி அதிகாரப்பூர்வமாய் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....