Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்சுற்றுலாத்தளங்கள்மனதை அலைப்பாய வைக்கும் ஆலப்புழா! சொர்க்கத்தில் இளைப்பாற வேண்டுமா அப்போது இந்த இடங்களுக்கு செல்லுங்கள்…

    மனதை அலைப்பாய வைக்கும் ஆலப்புழா! சொர்க்கத்தில் இளைப்பாற வேண்டுமா அப்போது இந்த இடங்களுக்கு செல்லுங்கள்…

    ஆலப்புழா கேரளா மாநிலத்தில் உள்ள மாவட்டம் ஆகும். இது கேரள மாநிலத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களுள் ஒன்றாக திகழ்கின்றது. எங்கு காணினும் பச்சை பசேல் என்று உங்களை சொர்க்கத்தின் வாசலில் கொண்டுப் போய்ச் சேர்க்கும்.  சரி வாருங்கள் என்னனென்ன சிறப்பான பகுதிகள் இங்கு இருக்கின்றன என்பதை தெரிந்துக் கொள்ளலாம். 

    கவரும் படகு இல்லங்கள்: 

    நவீன வசதிகள் கொண்ட படகு இல்லங்கள் தான் சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிக அளவில் செல்லக் காரணம். காண அழகு மட்டுமல்ல இங்கே தங்கினால் புத்துணர்வும் புதிய அனுபவமும் கிடைக்கும்.  கேரளாவின் அனைத்து ஆற்று பகுதிகளிலும் இந்த படகு இல்லங்கள் காணப்படுகின்றன. அதுவும் ஆலப்புழாவில் அதிகமான மற்றும் புதிய வகை படகுகள் மூலம் பயணிக்கலாம். 

    ஆலப்புழா கடற்கரை: 

    மிகவும் ரசிக்கத்தக்க ஒன்று ஆலப்புழா கடற்கரை. ஓய்வெடுப்பதற்கும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் மிக அருமையான இடம் தான் இந்தப்பகுதி. சுற்றலாப் பயணிகள் இங்கு வரமால் செல்ல மாட்டார்கள். இந்த ஆலப்புழா கடற்கரை ஆலப்புழா இரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து நேரடி சாலை இணைப்பு வசதிகள் உள்ளன. 

    பத்திர மணல்: 

    பத்திர மணல் பார்க்கும் கண்களை கவருவதற்கே இங்கு கூட்டு தீவாக வந்திருக்கும் போல. நம்மை மேலும் உணர்ச்சிவசப்பட வைக்கும் காட்சிகள் இங்கு அதிகம் காணப்படும். 10 ஏக்கர் பரப்பளவில் இந்தக் குட்டி தீவு காணப்படுகிறது. படகு வசதியின் மூலன் இந்தத் தீவிற்கு செல்லலாம். அருகிலேயே வேம்ப நாட்டு ஏரியும் காணப்படுகிறது இதன் அழகை மேலும் மெருகூட்ட. பசுமை மிகுந்த காட்சிகளும் நம் மனதை தென்றல் தீண்டிச் செல்வது போல் தோன்ற வைக்கும் நமக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் தான். ஆலப்புழா நகரத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் தாள் அமைத்துள்ளது இந்த அற்புதத் தீவு. 

    அம்பலப் புழா: 

    அம்பலப் புழா கிருஷ்ணர் கோவில் மிக பழமையான கோவில் ஆகும். இந்தக் கோவிலைக் கட்டியவர் தீவநாராயணன் தம்புரான் ராஜா ஆவார். இக்கோவிலின் கருவறையில் பார்த்தசாரதி கையில் சாட்டையுடன் ருத்ர கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்தக் கோலத்தை இங்கு மட்டுமே காண முடியும். குருவாயூர் கோவிலுடன் இந்த கிருஷ்ணர் கோவில் மிக நெருங்கிய தொடர்புடையது என்று மக்கள் கூறுகின்றனர். 

    கிருஷ்ணாபுரம் அரண்மனை: 

    கிருஷ்ணாபுரம் கோவிலுக்கு அருகில் இருப்பதால் இந்த அரண்மனைக்கு இப்பெயர் கிட்டியது. பழங்கால கேரள கட்டிடக்கலையை இந்த அரண்மனை சுட்டிக் காட்டுகிறது. சுவரோவியங்கள், அரண்மனையைச் சுற்றி தோட்டங்கள், குளம் போன்றவை இருப்பதால் காண்பதற்கே கொள்ளை அழகு தான். இந்த அரண்மனை மலையின் உச்சியில் காட்சியளிப்பதால் புகைப்படம் எடுப்பதற்கும் பயணம் மேற்கொள்ளவும் அருமையாக இருக்கும்.

    பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன ஆலப்புழாவில், நேரம் கிடைத்தால் சுற்றுலா சென்று வாருங்கள். நிச்சயம் இந்தப் பதிவை நீங்கள் நினைப்பீர்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....