Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமேகதாதுவில் அணை கட்டப்படுமா ? : டெல்லி விரையவிருக்கும் கர்நாடக மக்கள் பிரதிநிதிகள்

    மேகதாதுவில் அணை கட்டப்படுமா ? : டெல்லி விரையவிருக்கும் கர்நாடக மக்கள் பிரதிநிதிகள்

    மேகதாதுவில் அணை கட்டுவது மற்றும் மற்ற நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை பற்றி ஆலோசிக்க கர்நாடகாவில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில், தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்து டெல்லி செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    கார்நாடகாவில் உள்ள மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கி உள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், இதனை ஆரம்பம் முதலே தமிழகம் கடுமையாக எதிர்த்து வருகிறது. 

    அதேபோல், மகதாயி திட்டத்திற்கு கோவா அரசும், கிருஷ்ணா நதிநீர் விவகாரத்தில் ஆந்திர தெலுங்கானா அரசுகளும் பிரச்சினை செய்து வருகின்றன. இப்படி அனைத்து நீர்விவகாரத்திலும் ஏதேனும் ஒருவிதத்தில் பிரச்சினை இருப்பதால், உடனடி தீர்வு கொண்டுவரக் கோரி அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் சமீபத்தில் பாதயாத்திரை சென்றனர். இதனால் மேலும் நெருக்கடிக்கு உள்ளான அங்கு ஆட்சியில் உள்ள பாஜக அரசு, இந்த விவகாரத்தில் ஆலோசனை பெற கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் விதான் சவுதாவில் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த கார்ஜோள், சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி, சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சித்தாராமையா, மேலவை எதிர்கட்சித் தலைவர் ஹரிபிரசாத், காங்கிரஸ் சார்பில் சிவகுமார், எச்.கே.பட்டேல் மற்றும் ம.ஜ.த சார்பில் பண்டப்பா காசம்பூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்து, அணை கட்டுவது தொடர்பாக டெல்லி செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூட்டம் முடிந்தபின் இது குறித்துப் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, நீர்பாசனங்களில் உள்ள பிரச்சினை குறித்துப் பேசியுள்ளோம். குறிப்பாக, மேகதாதுவில் உள்ள பிரச்சினை பற்றி பேசினோம். காவிரி மேலாண்மை வாரியத்தில் விவாதிக்கப்பட்டதைப் பற்றியும் பேசினோம். வரும் திங்கட்கிழமை அமைச்சர் கோவிந்த கார்ஜோள் டெல்லி செல்ல உள்ளார். மேலும், அனைத்து கட்சித் தலைவர்களும் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து பேசுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாநிலங்களுக்கிடையே ஆறுகளை இணைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எங்கள் மாநிலத்துக்குரிய பங்கை எடுத்துக்கொண்டு மற்ற மாநிலங்களுடன் ஆறுகளை பகிர்ந்து கொள்ளவது குறித்துப் பேசினோம் எனக் கூறியுள்ளார். இதற்குச் சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி தரும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், விரைவில் பிரதமரைச் சந்தித்து பேசுவோம் எனவும் தெரிவித்தார்.

    இதுகுறித்துப் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா, தாங்கள் கொடுத்த நெருக்கடியின் பெயரிலேயே இந்த அனைத்து கட்சிக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது  என்றும், கிருஷ்ணா நதி விவகாரம் குறித்தும் பேசியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....