Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகர்நாடக சட்டமன்றத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

    கர்நாடக சட்டமன்றத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ளது. 

    கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வருகிற 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13 தொடங்கி 20 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்து 102 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

    இந்த மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் பரிசீலனையில் 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 3 ஆயிரத்து 44 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 

    இந்நிலையில் மனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாள் ஆகும். மனுக்களை இன்று மதியம் 3 மணிக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, இன்று மாலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதே சமயம் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் இன்று ஒதுக்கப்பட உள்ளன. 

    இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நிலையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி; நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....