Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும்! கர்நாடக முதலமைச்சர் வலியுறுத்தல்!

    மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும்! கர்நாடக முதலமைச்சர் வலியுறுத்தல்!

    மேக தாதுவில் அணைக் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநில முதலமைச்சர் மத்திய அமைச்சரிடம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட போவதாக கர்நாடக அரசின் கொள்கையை எதிர்த்து காவிரி அணையில் மேகதாது அணை கட்டக் கூடாது என தமிழ்நாடு சட்டசபையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை ஆளுநருக்கும் அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு. 

    இதைத்தொடர்ந்து கடந்த மாதம் கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை எதிர்த்து மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியது. மேலும் உள் மாநில விவகாரத்தில் பிற மாநிலம் தலையிடுவது சட்ட ஒழுங்கை மீறுவது என்றும் தெரிவித்தது.

    கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று டெல்லி புறப்பட்டார். மேலும் இன்று காலை வந்த தகவலின் படி மத்திய நீர்வளத் துறை அமைச்சர் மகேந்திர சிங்கை சென்று சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். 

    மேலும் இது நிச்சயமாக மேகதாது அணை விவகராம் தான் இருக்க வேண்டும் என்று செய்திகள் வெளிவருகின்றன. மேலும் கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திருப்பார் என தெரிகிறது. இதுமட்டும் அன்றி அப்பர் கிருஷ்ணா திட்டத்தைப் பற்றியும் எடுத்துரைத்து இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையுடன் அமைச்சர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்நாடக முதலமைச்சர் மத்திய வனத்துறை அமைச்சரையும் சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....