Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’ என்றழைக்க முடியுமா? நகரத்தைக் கழக ஆட்சிகள் கைவிட்டு விட்டன - கொதித்த...

    மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’ என்றழைக்க முடியுமா? நகரத்தைக் கழக ஆட்சிகள் கைவிட்டு விட்டன – கொதித்த கமல்ஹாசன்!

    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் வருகிற பத்தொன்பதாம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆளுங்கட்சியான திமுகவின் மீதான குற்றச்சாட்டுகளை அனைத்து கட்சியினரும் வாகு சேகரிப்பின் பொது முன்வைத்து வருகின்றனர்.

    இப்படியான சூழலில்தான், மக்கள் நீதி மய்யம் சார்பாக மதுரை மாநகராட்சியில் நிற்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நிறுவனரும் ஆன கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது, கமல்ஹாசன் அவர்கள் மதுரை மாநகராட்சியின் ஆண்டு வருவாய் சுமார் 586 கோடி. ஆனால், அதற்குரிய நியாயமான வளர்ச்சிப்பணிகள் நிகழவே இல்லை. குடிநீர்ப் பிரச்னை, பாதாள சாக்கடைப் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள். போர்க்களம் போலிருக்கிறது மதுரை என்று கொதித்தேழுந்து பேசினார் அவர்.

    kamalhaasan

    மேலும், மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’ என்றழைக்க முடியுமா? பண்பாட்டுப் பெருமிதம் மிக்க நகரத்தைக் கழக ஆட்சிகள் கைவிட்டு விட்டன. உள்ளாட்சித் தேர்தலில் வென்று மக்கள் பங்கேற்புடன் ‘ஏரியா சபைகள்’ அமைக்கப்பட்டு இந்தப் பிரச்னைகள் ஒவ்வொன்றாகத் தீர்க்கப்படும் என்று உறுதி அளித்தார், கமல்ஹாசன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....