Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகாவல் துறை அறிமுகப்படுத்திய புதிய செயலி- கண்காணிப்பு தீவிரம்!

    காவல் துறை அறிமுகப்படுத்திய புதிய செயலி- கண்காணிப்பு தீவிரம்!

    தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்திய காவல் உதவி செயலியின் மூலம் 60 வகையான உதவிகளை பெறலாம். நாம் எந்த உதவிகளை வேண்டுமானாலும் இதில் இருந்து சுலபமாக பெறலாம் என்கிறார் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு.

    காவல் உதவி செயலியின் சில குறிப்பிட்ட உதவிகளை இங்கே காணலாம். 

    முன்னதாக அவசர அழைப்பு பொத்தான் செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அவசர எண்களான 100, 101, 112 போன்ற எண்கள் தோன்றும். நீங்கள் எந்த விடயத்திற்காக பொத்தானை அழுத்தினீர்கள் என்பது குறித்து கேட்கும். அப்போது உங்களின் உதவி பொத்தானை அழுத்தி தேவையான உதவியை பெற்றுக் கொள்ளலாம். 

    புகார் அளிக்கும் முறைகள்:
    • நீங்கள் முதலில் இந்த செயலியில் பதிவு செய்த எண்ணில் இருந்து அழைப்பதின் மூலம் நேரடியாக உதவியைப் பெறலாம். இது ஒரு வகையான உங்கள் புகார் அளிக்கும் செயல் ஆகும். 
    • மற்றொன்று மொபைல் அடிப்படையிலான புகார் அளிக்கும் செயல். இதில் உங்களது அவசர புகாரை பதிவு செய்ய முடியும். அதற்கு முதலில் நீங்கள் எந்த வகையான புகாரைக் கொடுக்கப் போகுறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து நீங்கள் கொடுத்த புகார் எந்த துணை வகையைச் சேர்ந்தது என்று தேர்வு செய்ய வேண்டும். 
    • எடுத்துக்காட்டாக சாலை விபத்து என்று குறிப்பிட்டால் அதற்கு துணை வகைகளாக காயமடைந்த நபர், வாகனத்தை இடித்துவிட்டு ஓடுதல், மரணம் விளைவிக்கும் விபத்து போன்றவை தோன்றும். இதில் எந்த துணை வகை உங்களுக்கு இணக்கமாக உள்ளதோ அதை தேர்வு செய்துக் கொள்ளலாம். 
    • பிறகு அந்த புகார் குறித்து, நீங்கள் அளிக்கும் கருத்தையும் பதிவு செய்யலாம். பின்பு உங்கள் முகவரி அல்லது சம்பவம் நடந்த இடம் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். மேலும் நீங்கள் ஏதேனும் ஆவணங்கள் அல்லது ஆதாரங்கள் வைத்திருந்தால் அதையும் இணைத்து அனுப்பலாம். 
    லொகேஷன் ஷாரிங்:
    • இந்த லொகேஷன் ஷாரிங், நீங்கள் இருக்கும் இடத்தை உங்கள் நண்பர்கள் பெற்றோர்கள் கண்காணிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்கள் பெற்றோரின் மொபைல் எண்ணை வாட்சப் மூலம் உள்ளீடு செய்து லொகேஷனை ஷார் செய்யலாம். 
    • கூகுள் மேப் பயன்படுத்தி, உங்கள் இருப்பிடத்தை பகிரும் அமைப்பு காவல் உதவி செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது. 
    மிக அவசரத் தேவை:

    மிகவும் அவசரம் என்றால் குறிப்பாக பெண்கள் அவசர பொத்தானை அழுத்தினால்,

    • உங்களின் நேரடி இருப்பிடம் பகிரப்படும்.
    • உங்களின் பின் கேமெராவை பயன்படுத்தி 15 வினாடிகள் கொண்ட வீடியோ காவல் துறை கண்காணிப்பு அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
    •  30 முதல் 45 நிமிடங்கள் வரை உங்களின் நேரடி இருப்பிடத்தைக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் கவனமாக பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
    பிற சேவைகள்: 
    • காவல் நிலைய இருப்பிடங்கள் இருக்கும் இடங்களை இந்த செயலியின் மூலம் அறிந்துக் கொள்ளலாம். 
    • கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் விவரங்களை அறிந்துக் கொள்ளலாம். 
    • மேலும் பிற அவசர உதவி எண்களையும் அறிந்துக் கொள்ளலாம். 
    • வாகன சரிபார்ப்பு அதாவது திருடப்பட்டால் அல்லது காணமால் போனால் அதையும் இந்த செயலியை பயன்படுத்தி புகார் பதிவு செய்யலாம். 
    • இணையவழியாக ஏதேனும் குற்றங்கள் மாற்றம் நிதி மோசடி போன்றவற்றையும் இந்த செயலியை பயன்படுத்தி புகார் அளிக்கலாம். 
    • மேலும் நீங்கள் அளித்த புகார் எந்த நிலையில் (fir, csr) உள்ளது என்பதையும் இதிலேயே தெரிந்துக் கொள்ளலாம்.  

    உயர் காவல் துறை ஆணையர் சைலேந்திர பாபு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....