Thursday, April 25, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஎஸ்பிஐ வங்கியில் வேலை.. இளைஞர்களே முந்துங்கள்..

    எஸ்பிஐ வங்கியில் வேலை.. இளைஞர்களே முந்துங்கள்..

    பாராத் ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 65 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    வங்கியில் வேலை என்பது பலரின் கனவாக உள்ளது. இதற்காக இந்திய அளவில் பலர் தயாராகிவருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாராத் ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) வங்கியில் நிரப்பப்பட உள்ள 65 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

    மொத்தமாக Specialist cadre officer என்ற பிரிவில் 65 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதாவதொரு பிரிவில் பட்டமும், எம்சிஏ, எம்பிஏ, பிஜிடிஎம், பிஇ., பி.டெக்., முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானோர் என்று தெரிவிக்கபட்டுள்ளது. 

    மேலும், இந்த காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 62 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும், மாத ஊதியமாக ஆண்டுக்கு ரூ.19.50 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொது, ஓபிசி, பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.760 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். https://bank.sbi/careersஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 12 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விவரங்களை அறிந்துக்கொள்ள Welcome to SBI Recruitment – CRPD/SCO/2022-23/23 (bank.sbi) என்ற இணையதளத்தை அனுகவும். 

    பல்வேறு சாதனைகளுக்காக கனவு மாணவர் விருது; தமிழிசையை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....