Tuesday, May 16, 2023
மேலும்
    Homeதொழில்நுட்பம்ஐபிஎல் பார்க்க ஜியோவின் புதிய ஆஃபர் : டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இலவசம் !

    ஐபிஎல் பார்க்க ஜியோவின் புதிய ஆஃபர் : டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இலவசம் !

    இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் அதனை கண்டுகளிக்க ஜியோ சிம் நிறுவனம் புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

    ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய சந்தாதாரர்களுக்காக தன்னுடைய பழைய திட்டங்களை மாற்றி புதிதாக அறிமுகம் செய்துள்ளது. அது ஐபிஎல் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருடன் இணைந்து இந்த பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. தன்னுடைய ரூபாய் 599 மற்றும் ரூபாய் 2999 பிளான்களுடன் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரை இலவசமாகப் பார்க்க அனுமதி அளிக்கும் திட்டமாகும். இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் தேவையில்லை. 

    தற்பொழுது இந்த புதிய ரூபாய் 599 மற்றும் ரூபாய் 2999 ஆகிய திட்டங்கள் ஜியோ நிறுவனத்தின் கிரிக்கெட் பிளான்களில் புதிதாக இணைந்துள்ளன. இந்த பட்டியலில் திட்டங்கள் ரூபாய் 499தில் இருந்து 3199வரை உள்ளன. இந்த திட்டங்களை ஜியோவின் திட்டங்களை கடந்த 28 நாட்களாய்ப் பயன்படுத்தி வருபவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். 

    மேலும், 599 திட்டத்தில் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால், இவற்றில் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்க்கு கூடுதல் பலன்கள் எதுவும் இல்லை. இதனைப்பற்றி கூறியுள்ள ஜியோ நிறுவனம் இது கிரிக்கெட் பார்ப்பதற்கு மட்டுமே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட திட்டம் என கூறியுள்ளது. 

    இதை நீங்கள் பயன்படுத்தவேண்டுமானால் வேறு ஏதேனும் திட்டம் ஆக்ட்டிவ் ஆக இருக்க வேண்டும். இந்த புதிய திட்டத்தைப் பொறுத்தவரை இதில் ஜியோ டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவை 12 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் , 55 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி வீதம்  டேட்டாவும் வழங்கப்படும். 

    ஒரு நாளைக்கான டேட்டா முடிந்தவுடன் பதிவிறக்க வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். மேலும், இந்த திட்டம் மூலம் மொபைல்போன்களில் மட்டுமே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை பயன்படுத்த முடியுமென்றும், டிவி அல்லது மடிக்கணினிகளில் பார்க்க முடியாது எனவும் கூறியுள்ளது. 

    ரூபாய் 2999 சந்தா வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அதிரடி சந்தா ஆகும். இதன்மூலம், தினமும் 2.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினம் 100 எஸ்எம்எஸ் ஆகிவற்றை செய்து கொள்ளலாம். இதனுடன் இலவச இணைப்பாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளமும் கிடைக்கும். இந்த திட்டமும் மொபைல்போனில் மட்டுமே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் பார்க்க அனுமதிக்கும். நீங்கள் பெரிய திரைகளில் பார்க்க விரும்பினால் ஜியோவின் ருபாய் 1499 மற்றும் ரூபாய் 4999 திட்டங்களைப் பயன்படுத்தி பார்க்கலாம். 

    ரூபாய் 1499 திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். இதனோடு 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி வீதம் டேட்டாவும் கிடைக்கும். ரூபாய் 4199 திட்டத்தில் ஒரு நாளைக்கு 3ஜிபி வீதம் டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் கிடைக்கும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....