Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஜெய் பீமும் ஆஸ்கர் பொய்யுரைகளும்! பெருமிதம் வேறு!

    ஜெய் பீமும் ஆஸ்கர் பொய்யுரைகளும்! பெருமிதம் வேறு!

    ஜெய் பீம் திரைப்படம் குறித்தும் ஆஸ்கர் விருது குறித்தும் பல விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் விவாதங்கள் அனைத்தும் ஒரு பக்கமே நடந்து வருவது தான் விந்தை! ஜெய் பீம் திரைப்படம் குறித்து பல பெருமிதங்கள் உள்ளன. அப்படி இருக்கையில் இந்த ஆஸ்கர் ஜெய் பீம் திரைப்படத்தின் ஆஸ்கர் சுய பெருமிதம் குறித்து காண்போம்!

    விண்ணப்பம், தேர்வு, விருது என்று மூன்று நிலைகளை உள்ளடக்கியதுதான், ஆஸ்கர் விருது! இந்தியா பரிந்துரைக்கும் திரைப்படம் அல்லாது விண்ணப்பிக்க தகுதியுள்ள அனைத்து படங்களும் ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அவை நினைவூட்டல் பட்டியலாக வெளியிடப்படும்.

    jai bheem

    இந்தியப் படங்களை நேரடியாக விண்ணப்பிக்க 2020 வரை அனுமதி அளிக்கப்படவில்லை. அதன் பின்பு, ஆஸ்கர் விதி திருத்தப்படவே, இந்திய திரைப்படங்கள் ஆஸ்கருக்கு நேரடியாக விண்ணப்பிக்கத் தொடங்கின.

    அதன்படிதான், ஜெய் பீம் திரைப்படமும் ஆஸ்கருக்கு ஜெய் பீம் திரைப்பட குழுவால் அனுப்பிவைக்கப்பட்டது. ஆக, இந்திய திரைப்படக்குழுவால் ஜெய் பீம் தேர்வு செய்யப்படவில்லை. கூழாங்கல் திரைப்படமே இந்தியாவினால் தேர்வு செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்!

    koozhangal

    அடுத்து, ஆஸ்கர் சேனலில் ஜெய்பீம் வெளியான கதைக்கு வருவோம், ஆஸ்கர் விருதுக்கு படங்களை விண்ணப்பித்த பின்னர், அந்தப் படம் குறித்து பிரச்சாரம் செய்வதற்காக சுறுக்கமான விளக்கப்படத்தை ஆஸ்கர் யூடியூப் சேனலில் வெளியிட முடியும். ஆனால் அவ்வாறாக வெளியிட படக்குழு கட்டணம் செலுத்த வேண்டும், அப்படியாகத்தான் ஜெய்பீம் திரைப்படத்திற்கு ரூ. 3,72,000 கட்டணம் செலுத்தி ஆஸ்கர் சேனலில் விளம்பரம் செய்யப்பட்டது.

    jai bheem

    கொரோனா விதிவிலக்கு காரணமாக ஜெய்பீம் படத்தின் விண்ணப்பத்தை அனுப்ப முடிந்தது; விண்ணப்பத்தை இலவசமாக அனுப்புகிறவர்கள், காசு கொடுத்து படத்தை விளம்பரம் செய்யலாம் என்கிற வாய்ப்பை பயன்படுத்தி, விளம்பரம் செய்துள்ளார்கள். இதில் தகுதி, தேர்வு என்றெல்லாம் எதுவும் இல்லை.

    இவ்வாறாகத்தான் ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் ‘ஜெய்பீம்’ காட்சிப்படுத்தப்பட்டது. ஆஸ்கர் விருது குழுவினரே தேர்ந்தெடுத்து வெளியிட்டதாக கூறியது உண்மையல்ல!

    Oscars

    மொத்தத்தில், ஆஸ்கர் விருதுக்கு ‘ஜெய்பீம்’ திரைப்படம்,  ‘ஜெய்பீம்’ திரைப்பட குழுவாலேயே அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து ‘ஜெய்பீம்’ வெளியேற்றப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....