Friday, March 24, 2023
மேலும்
    Homeஆன்மிகம்கருப்பு கயிறு காலில் கட்டுவது ஆபத்தானதா அல்லது நன்மையைத் தரக்கூடியதா?

    கருப்பு கயிறு காலில் கட்டுவது ஆபத்தானதா அல்லது நன்மையைத் தரக்கூடியதா?

    காலில் கருப்பு கயிறை கட்டிக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும். எப்படி இந்த கருப்பு கயிறை கட்டிக் கொள்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

    ஒரு சிலர் தனது நன்மைக்காக கருப்பு கயிறை காலில் கட்டிக் கொள்வது வழக்கமாக வைத்துள்ளனர். மற்ற சிலரும் இதனை ஆபத்தானதா கருதிகின்றனர்.

    black rope around the foot

    கருப்பு கயிறை கட்டிக் கொள்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்:-

    • கருப்பு கயிறு காலில் கட்டிக் கொள்வதால் நம்மை சுற்றி இருக்கக்கூடிய தீய சக்திகள் நெருங்காது.
    • நம் எதிரிகள் அல்லது நம் வளர்ச்சி பிடிக்காதவர்களால் வைக்கப்படும் செய்வினை, பில்லி, சூனியம் போன்ற துஷ்ட சக்திகளிலிருந்து காக்கும்.
    • சிலரின் கெடுபலன் தரக்கூடிய கண் திருஷ்டி அண்டாது.
    • சனி பகவானின் கெடு பலன், பார்வை வேகத்தை இந்த கருப்பு கயிறு கட்டுப்படுத்துவதோடு, குறைக்கிறது.

    எப்போது கருப்பு கயிற்றைக் கட்டிக் கொள்ள வேண்டும்?

    ->கருப்பு கயிறு கட்டிக் கொள்பவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் கட்டி கொள்வது நல்லது. அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டிக் கொள்ளவும். சனிக்கிழமைகளில் இந்த கயிற்றைக் கட்டிக் கொள்வது விசேஷமானது.

    ->இந்த கருப்பு கயிற்றைக் கட்டிக் கொள்வதால் நாம் அறியாமல் நமக்கு விபத்து ஏற்பட்டாலும், பெரிய பாதிப்பு இல்லாமல் பாதுகாக்கும். உடல் ஆரோக்கிய கோளாறு உள்ளவர்கள் அனுமன் கோயில் வைத்து கட்டிக் கொண்டால் நலம் பெறலாம்.

    black rope

    ->கயிறை கட்டிக் கொள்ளும் போது ஸ்ரீ ராம ஜெயம் சொல்லலாம், அனுமன், துர்கா தேவியை மனதில் நினைத்துக் கொண்டு மந்திரங்களை உச்சரிக்கலாம்.

    ->எதிர்மறை சக்திகளிலிருந்து காக்கக் கூடிய இந்த கயிறை பருவமடைந்த பெண்கள் தங்களின் வலது காலில் கட்டிக் கொள்வதால் பயம், தீய சக்திகளிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

    ->இந்த கருப்பு கயிறு கட்டும் போது அந்த கயிற்றில் 9 முடிச்சுகள் போடப்பட்டிருக்க வேண்டும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    thoothukudi sathankulam

    சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது.  தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை...