Saturday, March 16, 2024
மேலும்
    Homeஅறிவியல்திருஷ்டி பொம்மை வைப்பது மூட நம்பிக்கையா? இல்லை அறிவியலா? அவற்றை வீட்டில் வைக்க காரணம்தான் என்ன...

    திருஷ்டி பொம்மை வைப்பது மூட நம்பிக்கையா? இல்லை அறிவியலா? அவற்றை வீட்டில் வைக்க காரணம்தான் என்ன ?

    புதிய இல்லம் கட்டினாலோ,வேலை கிடைத்தாலோ அல்லது ஏதாவது சாதனை நிகழ்த்தினாலோ எந்த நல்ல நிகழ்வு நடந்தாலும் உடனே, “கண்திருஷ்டி பட்டுருச்சு!” எனச் சொல்லி சுத்தி போட, அடுத்த வீட்டுக் கூரையைத் தேடிப் போவார்கள் நம் வீட்டு தாய்மார்கள்.

    கல்லடி பட்டாலும் படலாம்… கண்ணடி பட கூடாது என நம் மக்களிடையில் பெரிதும் பேசப்படும் வாக்கியங்களும் உள்ளது.

    ஏன் திருஷ்டி பொம்மைகளை வீட்டில் வைக்கிறோம்? இந்த வழக்கம் எதனால் வந்தது? திருஷ்டி பொம்மைகள் வைப்பது சரியா…இல்லை மூட நம்பிக்கையா ? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க !

    பல்வேறு சடங்கு, சம்பிரதாயங்கள் நிறைந்த தமிழர் கலாச்சாரத்தில், நம் இல்லங்களில் இன்றும் மாறாமல் தொடரும் வழக்கங்கள் பல, அதில் வீடுகளில் திருஷ்டி பொம்மைகளை தொங்க விடுவது, கண் திருஷ்டிக்கு சுத்திப்போடுவதும் உண்டு

    திருஷ்டி என்பது ஒரு சம்ஸ்கிருதச் சொல், அதற்கு ‘எல்லோரும் நோக்குதல்’ என்று அர்த்தம்.

    உடும்பின் நாக்கை விட பார்ப்போரை பயங்கொள்ள வைக்கும் பெரிய நாக்கு கொண்ட உருவம் தான் திருஷ்டி பொம்மை. பெரிய அணில் மீசைகளையும், கண்களை விரித்து ஆக்ரோஷமாக பார்ப்பது போன்ற உருவத்தையும் கொண்டே திருஷ்டி பொம்மைகள் காணப்படுகின்றன.

    கண்திருஷ்டி பொம்மை எதிர்மறை எண்ணங்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. முந்தைய காலகட்டங்களில் இருந்தே, நம் முன்னோர்கள் சம்ப்ரதாயம் என செய்து வந்த பல செயல்களுக்கு பின் அறிவியலும் இருக்கிறது என்பது தற்போது நிருபிக்கப்பட்ட ஒன்று.

    அப்படி பின்பற்ற பட்ட இந்த திருஷ்டி பொம்மைகளுக்கு பின் சிறிது அறிவியலும் இருக்கிறது.

    மனித எண்ணங்களுக்கு மாபெரும் சக்தி உள்ளது என்பது அறிவியல் ஒப்புக்கொண்ட ஒன்று. மனித எண்ணங்கள் நேர்மறை ஆற்றல், எதிர்மறை ஆற்றல் என இரண்டையும் உருவாக்க கூடிய வல்லமை படைத்தது.

    நேர்மறை எண்ணங்களால் நன்மைகளும் நிகழும், எதிர்மறை எண்ணங்களால் பெரிய விளைவுகளும் ஏற்படும். இதன் காரணமாக தான் முன்னோர்கள் பல வழக்கங்களை பின்பற்றி வந்துள்ளனர்.

    உப்பை பயன்படுத்தி சுத்தி போடுவதன் பின்னிருக்கும் காரணம், இயற்கையாகவே உப்பிற்கு எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி உள்ளது என்பதால் தான்.

    மேலும், செம்பு பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைப்பது, செம்பு பாத்திரங்களை அதிகம் உபயோகிப்பது போன்றவை பின்னும் அறிவியல் இருக்கிறது, ஏனென்றால் செம்பு உலகமானது எதிர்மறை ஆற்றலை தனக்குள் இழுத்து கொண்டு அதை நேர்மறையாக்கும் சக்தி படைத்தது.

    திருஷ்டி பொம்மை இல்லாத வீடுகளை நம்மால் அதிகம் பார்க்கவே முடியாது.வாகனங்களிலும் இது தவறாமல் இடம்பெற்றிருக்கும்.

    இதன் காரணம் என்னவென்றால், ஒருவரின் செல்வ செழிப்பை பார்த்து மகிழ்ச்சியடைபவர்களும் உண்டு, அதை பார்த்து பொறாமை கொள்பவர்களும் உண்டு !

    இதைத்தான் பாரதிதாசன் “வெள்ளை உடுத்தி வெளியிலொரு வன்சென்றால் கொள்ளிக்கண் பாய்ச்சும் கொடிய உலகத்தில்” என்று எதிர்பாராத முத்தம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    அதுமட்டுமில்லாமல், ஏழ்மையில் தவிப்பவர்களின் விரக்தி எண்ணங்களும் பிறரை பார்த்து அதிகரிக்கும் அவலமும் நிகழும்.

    மனிதர்களின் எதிர்மறை எண்ணங்கள் negative enargy எனப்படும் எதிர்மறை ஆற்றலை பரப்புகிறது. இதனால் இந்த பிரபஞ்சத்தில் பரவி உள்ள இதுபோன்ற ஆற்றல்கள் தூண்டப்பட்டு, அதிக அளவில் கேடு விளைவிக்கும் என்பதே நிற்பிக்கப்படாத உண்மை !

    ஆகா, நம் முன்னோர்கள் செய்த அனைத்து செயல்களிலும் அறிவியலும் இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை !

    நீங்கள் அறியாத தகவல்களை அன்றாடம் அறிந்துகொள்ள தினவாசல் செய்திகளோடு இணைந்திருங்க மக்களே !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....