Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஅப்புறம் என்ன? ஐபிஎல் திருவிழாவை 'ஆரம்பிக்கலாங்களா? '

    அப்புறம் என்ன? ஐபிஎல் திருவிழாவை ‘ஆரம்பிக்கலாங்களா? ‘

    ஐபிஎல் ஆரம்பம்

    மற்ற அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளை விடவும் ஐபிஎல் என அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கு இரசிகர் பட்டாளம் அதிகம். இந்திய கிரிக்கெட் வாரியம் மற்ற கிரிக்கெட் வாரியங்களை விட முன்னனியில் இருக்க காரணம், ஐபிஎல்தான் என்றால் அது மிகையாகாது. 

    இவ்வாறான ஐபிஎல் தொடரானது இம்மாதம்  26 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 29 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மேலும் இவ்வருடம்  இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.ipl

    அதன்படி, வான்கடே மைதானத்திலும், பிரபோர்ன்,  டிஒய் பாட்டீல் போன்ற மைதானங்களில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறும் என்றும், புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் மீதமுள்ள 15 போட்டிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறுவது இரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது. இருப்பினும், எங்கே நடந்தாலும் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் இந்த  ஏமாற்றம் தனிந்துவிடும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    ஆரம்பிக்கலாங்களா?

    ஐபிஎல் தொடரானது இம்மாதம்  26 ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், ஐபிஎல் குறித்த பேச்சுகள், விவாதங்கள் குறைவாக இருப்பதாகவே தோன்றுவதாக கிரிக்கெட் இரசிகர்கள் தெரிவித்து வர அந்நிலை தற்போது மாறியிருக்கிறது. அதற்கு முழு முதற்காரணம் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டதே!

    ஆம்! இம்மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அட்டவணையின்படி, மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.

    பங்கேற்கும் அணிகள் 

    மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் , சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....