Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல்: யார் எந்த அணிக்கு கேப்டன்?

    ஐபிஎல்: யார் எந்த அணிக்கு கேப்டன்?

    ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அணிகளின் கேப்டன்கள் யார் யார் என்பதை இப்பதிவில் காண்போம்.

    இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 16-ஆவது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது.

    இதைத்தொடர்ந்து, இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற மார்ச் 31-ஆம் தேதி தொடங்கி மே 21-ஆம் தேதி நிறைவடைகிறது.

    ஐபிஎல் போட்டிகள் இம்முறை சென்னை, அகமதாபாத், மொஹலி, லக்னௌ, ஹைதராபாத், பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவாஹாட்டி, தரம்சாலா ஆகிய நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

    அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    குரூப் ஏ பிரிவில் உள்ள அணிகள்:

    மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், தில்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.

    குரூப் பி பிரிவில் உள்ள அணிகள்:

    சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத், பஞ்சாப் கிங்ஸ் லெவன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் டைட்டன்ஸ்.

    ஐபிஎல் 2023: அணிகளின் கேப்டன்கள்
    குஜராத் – பாண்டியா
    சிஎஸ்கே – தோனி
    மும்பை – ரோஹித் சர்மா
    சன்ரைசர்ஸ் – மார்க்ரம்
    தில்லி – டேவிட் வார்னர்
    ஆர்சிபி – டு பிளெஸ்சிஸ்
    கேகேஆர் – ஷ்ரேயஸ் ஐயர்
    ராஜஸ்தான் – சஞ்சு சாம்சன்
    லக்னோ – கே.எல். ராகுல்
    பஞ்சாப் கிங்ஸ் – ஷிகர் தவன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....