Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகோலாகலமாகத் தொடங்கும் ஐபிஎல்; இன்று முதல் போட்டி!

    கோலாகலமாகத் தொடங்கும் ஐபிஎல்; இன்று முதல் போட்டி!

    ஐபிஎல் தொடரின் 16-ஆவது சீசனின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்குகிறது. 

    இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 16-ஆவது ஐபிஎல் தொடர் இன்று கோலாகலமான முறையில் அகமதாபாத் மைதானத்தில் தொடங்க உள்ளது. 

    இன்று தொடங்கும் ஐபிஎல் திருவிழா வருகிற மே 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், இம்முறை ஐபிஎல் போட்டிகள் சென்னை, அகமதாபாத், மொஹலி, லக்னௌ, ஹைதராபாத், பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவாஹாட்டி, தரம்சாலா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.

    இன்று நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியை காண ரசிகர்கள் தற்போது ஆவலோடு உள்ளனர். 

    மேலும், தோனிக்கு இதுதான் இறுதி ஐபிஎல் தொடர் என்று தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ரோஹித் சர்மா, வாட்சன் போன்ற வீரர்கள் இந்த தகவலை மறுத்தாலும் தோனி இதுவரை இந்த தகவல் சம்பந்தமாக எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    60 சவரனா? 200 சவரனா? – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் புதிய திருப்பு முனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....