Wednesday, March 22, 2023
மேலும்
    Homeவாழ்வியல்செல்லப்பிராணிகள்பூனைகள் குறித்து நீங்கள் அறியாத சுவாரஸ்யங்கள் இதோ!

    பூனைகள் குறித்து நீங்கள் அறியாத சுவாரஸ்யங்கள் இதோ!

    வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் நாய்களுக்கு அடுத்தபடியாக அதிகளவில் வளர்க்கப்படுவை பூனைகள் தான். இந்த பூனைகள் குறித்து நீங்கள் அறியாத சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காண்போம்:

    • பூனைகள் தங்கள் உள்ளங்கால்கள் மூலம் வியர்வையை வெளியேற்றுகின்றன. மனிதர்களை போல தோல் வழியாக அவைகளால் வியர்வையை வெளியேற்ற இயலாது.
    • கடல் நீரில் உள்ள உப்பை சுத்திகரிக்கும் அளவிற்கு பூனைகளின் சிறுநீரகங்களுக்கு தன்மை உண்டு. இதனால், அவைகளுக்கு உப்பு தண்ணீர் பிரச்சனையே ஏற்படாது.
    • உணவு விஷயத்தில் பூனைகள் ஒரு சந்தேகப் பிராணி. அவை ஒன்றுக்கு இரண்டு முறை சாப்பிட்டு சோதனை செய்த பின்னரே, முழுமையாக உணவை உண்ணத் துவங்கும்.
    • நமக்கு எப்படி இடது, வலது கை இருப்பது போல பெண் பூனைகளுக்கு வலது கால் பழக்கமும், ஆண் பூனைகளுக்கு இடது கால் பழக்கமும் உள்ளன.
    • பூனைகளின் சிறுநீருக்கு இருட்டில் ஒளிரும் தன்மை உண்டு. இதனைக் கொண்டு தன்னுடைய இருப்பிடத்தை பூனை சரியாக கணித்துக் கொள்ளும்.
    • பூனைகளினால் நாக்கிற்கு இனிப்பு சுவையை உணரும் தன்மை கிடையாது என்பது கூடுதல் தகவல்.
    • பெரும்பாலான பூனைகள் அவைகளின் வாழ்நாளில் 80 சதவீதம் தூக்கத்தில்தான் செலவிடுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
    • வெளிநாடுகளில் பூனைகளை இராணுவத்தில் உபயோகபடுத்தவும் செய்கின்றனர்.

    இதையும் தெரிஞ்சுக்கோங்க; துளசி இலைகளின் பயன்கள் தெரியுமா? இதை படியுங்கள்; இப்படி செய்து பாருங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...