Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்கடன்களின் மீதான வட்டி விகிதம் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

    கடன்களின் மீதான வட்டி விகிதம் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

    வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை, அதாவது ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால், வாகனக் கடன், தனிநபர் கடன் மற்றும் வீட்டுக் கடனுக்கான வட்டி அதிகரிக்கும். பொதுமக்களுக்கு இது அதிர்ச்சியான தகவல் என்பதால், கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் சோகத்தில் உள்ளனர்.
    கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் தான் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு இப்போது தான் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறைக் கூடுவது வழக்கம். இக்கூட்டத்தில் வட்டி விகித மாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டு, பின்னர் அறிவிக்கப்படும்.
    கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி உயர்த்தப்படவில்லை.  இந்நிலையில் நிதிக் கொள்கை குழுவின் கூட்டம், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், கடந்த மூன்று மாதங்களாக அதிகரித்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டியில் 40 அடிப்படை புள்ளிகளை உயர்த்தி, ரெப்போ வட்டியை 4.40 சதவீதமாக்கியுள்ளது. மேலும், இந்த வட்டி உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
    மற்ற வங்கிகள் இருப்பு வைக்க வேண்டிய விகிதத்தை (CRR), 4 லிருந்து 4.5 சதவிகிதமாக மாற்றியுள்ளது ரிசர்வ் வங்கி. இதன் மூலம், ரூ. 87,000 கோடி ரிசர்வ் வங்கியின் உடைய கட்டுப்பாட்டிற்குள் வரும். இந்நடைமுறை மே மாதம் 21 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
    கூட்டம் முடிந்த பிறகு பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர், கடந்த இரு மாதங்களாக பணவீக்கம் உயர்ந்து 6 சதவிகிதத்தில் இருந்து 6.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி, ரெப்போ வட்டியை 4 சதவிகிதமாக குறைத்தோம். ஆனால், இப்போது 4.8 சதவிகிதமாக உயர்த்தியுள்ளோம்‌. கொரோனாக்குப் பிறகு பணப் புழக்கம் அதிகரித்து வந்தாலும், உணவு மற்றும் வேளாண் பொருட்களின் பணவீக்க உயர்வால் வட்டியை உயர்த்தி இருக்கிறோம். வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் பணத்திற்கான வட்டி மாற்றப்படாமல், 3.35 சதவிகிதத்தில் தொடர்கிறது என்று சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....