Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவன்னியர்களுக்கான 10.5 % உள் இட ஒதுக்கீடு ரத்தாகிறதா? உச்ச நீதி மன்றம் தீர்ப்பு!

    வன்னியர்களுக்கான 10.5 % உள் இட ஒதுக்கீடு ரத்தாகிறதா? உச்ச நீதி மன்றம் தீர்ப்பு!

    வன்னியர்களுக்கான 10.5 % உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

    கடந்த அதிமுக ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் வரும் வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் செல்லாது என்று மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு பாமக கட்சி உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து கடந்த மாதங்களில் இதற்கான விவாதங்கள் நடைபெற்று வந்தது. மேலும் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரமும் உண்டு எனத் தெரிவித்து வாதம் நடத்தியது. 

    உச்ச நீதி மன்றம் அதற்கு 20% இட ஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு என்று ஒதுக்கப்பட்டது. அதில் வன்னியர் சமூகம் மட்டுமில்லை. வன்னியர் அல்லாத இதர வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் போன்றோர் இடம் பெறுகிறார்கள். ஆகையால் இதில் 10.5 % இட ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு மட்டும் ஒதுக்குவது பாரபட்சம் பார்ப்பது போன்றது. 

    அது மட்டும் அல்லாமல் 20% இருக்கின்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மதுரை கிளை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என உச்ச நீதிமன்றம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. 

    மதுரை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சாதியின் அடிப்படையில் உள் இட ஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? எந்தவித கணக்கெடுப்பும் இன்றி சட்டம் இயற்றியது மிகவும் சட்டம் விரோதமானச் செயல்தானே போன்ற ஏழு வினாக்களைப் பகுப்பாய்ந்து செய்தது. மேலும் தமிழ்நாடு அரசு அளித்த விளக்கங்கள் போதுமானதாக இல்லை என்றுக் கூறி  10.5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு வன்னியர் சமூக மக்களை பெரிதும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....