Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்குடும்ப புகைப்படங்கள் எடுக்க அருமையான யோசனைகள்- உங்களுக்காக இதோ!

    குடும்ப புகைப்படங்கள் எடுக்க அருமையான யோசனைகள்- உங்களுக்காக இதோ!

    நண்பர்கள், உறவினர்கள் என ஒன்றாக சேர்ந்து எப்போதாவது தான் புகைப்படங்கள் எடுப்போம். ஆனால், கையில் கைப்பேசி வந்ததும் வித விதமாக செல்ஃபி எடுத்து, அதிலேயே வைத்துக் கொள்கிறோம். அதை பிரேம் செய்து வீட்டில் வைப்பதில்லை. அழகான தருணங்களை அவ்வப்போது படம் பிடித்து வைத்தால் பிற்காலத்தில், அவை மலரும் நினைவுகளாக நம் நெஞ்சில் நிற்கும். வாருங்கள் குடும்ப புகைப்படம் எடுக்க சில குறிப்புகளை அறியலாம். 

    வீட்டின் முன்பு: 

    வெளியெங்கும் செல்லாமல் வீட்டின் கதவு முன்பு நின்று கூட  ஒரு புகைப்படம் எடுக்கலாம். இது பின் புறத்தோற்றத்திற்கு மிக அழகாக இருக்கும். கதவுகளை மூடி உங்களை(குடும்பத்துடன்) மட்டும் முன்னிறுத்தி கிளிக் செய்தால் படம் பார்ப்பதற்கே தனியாகத் தெரியும். 

    சமையல் அறை: 

    சமயல் அறையில் அம்மா வேலை செய்யும் நேரத்தில், கணவரும் குழந்தைகளும் ஒன்றாக உதவி செய்வது போன்றும் குறும்பு செய்வது போன்றும் செய்கை காட்டி ஒரு கிளிக் எடுத்தால் தனித்துவமாக இருக்கும்.

    இல்லை, இப்படியும் செய்யலாம் குழந்தைகளுக்கு ஏதேனும் பொருள்களை கொடுப்பது போன்றும் கடிந்து கொள்வது போன்றும் செய்கை செய்யலாம். 

    வரவேற்பறை: 

    வரவேற்பறையில் இப்போதெல்லாம் சோஃபா, சேர்கள் என அனைவரின் வீட்டிலும் உள்ளது. இதில் குடும்பமாக அமர்ந்து படம் பார்ப்பது போலவும் குழந்தைகளை மடியில் வைத்து கணவன் மனைவி விழித்திருந்து தலைக்கோதுவது போலவும் காட்சிகளைப் படம் பிடித்து வைக்கலாம். 

    புகைப்படம்

    மெத்தையறை: 

    மெத்தை உரைக்கு அடர் வண்ண உரையையோ அல்லது வெள்ளை வண்ண உரையையோ பயன்படுத்தலாம். பின் குழந்தைகளுடன் தலையணைகளைக் கொடுத்து நீங்களும் சேர்ந்து விளையாடுவது போன்ற காட்சிகளையும் அழகாக பதிவு செய்யலாம். இல்லை, ஏதேனும் விளையாட்டுப் பொருள்கள் கொண்டு அவற்றை முன்பு வைத்து விளையாடுவது போன்ற காட்சிகளையும் எடுக்கலாம்.  

    எப்போதும் போல்: 

    நீங்கள் புகைப்படம் எடுப்பதற்கென்று எந்தவித ஏற்பாடுகளும் செய்யாமல், இருக்கும் இடத்திலேயே செய்யும் வேலைகளை நிறுத்திவிட்டு, காட்சிகளை பதிவு செய்து வைக்கலாம். இது மிகவும் தனித்துவமானதாக இருக்கும். 

    சாலை ஓரம்: 

    வெளியில் செல்லும் போது சாலை ஓர தெருக்களில் ஏதேனும், அடர் நிறத்தை தேர்வு செய்து அங்கு நின்று படம் எடுத்தால் மிகவும் அருமையாக இருக்கும்.

    வசிக்கும் ஊர்: 

    • நீங்கள் வசிக்கும் ஊரில் எந்த இடம் மிகவும் பிரபலமானதோ அல்லது அருகில் உள்ள பூங்காவிற்கோ செல்லும்போது அழகான தருணங்களைப் பதிவு செய்யலாம். 
    • குறிப்பாக பச்சை வண்ணம் பின் புறத்தில் இருந்தால், பற்களை காட்டி அனைவரும் சிரித்து, சில காட்சிகளைப் பதிவு செய்யலாம். 
    • நீங்கள் செல்லும் இடத்தில் தண்ணீர் குழாய்கள் அல்லது நீச்சல் தொட்டிகள் இருப்பின், தண்ணீரில் விளையாடி புகைப்படம் எடுக்கலாம். 
    • குட்டி குழந்தைகளாக இருப்பின், மேல் தூக்கி விளையாடி பிடிக்கும் போதும் குழந்தைகளுக்கு முத்தம் குடுத்து மகிழும் போதும் காட்சிகளைப் பதிவு செய்து வைக்கலாம். 

    இப்படி, அழாகான தருணங்களைப் படம் பிடித்து பிரேம் செய்து வீட்டில் வைத்தால் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும். 

    இவை அனைத்தும் சில குறிப்புகள் மட்டுமே! உங்களுக்கு வேறு ஏதும் புதுவிதமாக தோன்றினால் அந்த நினைவுகளையும் புகைப்படங்களாக சேமியுங்கள். மேலும் சில குறிப்புகளை அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....