Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇன்னும் 5 வருடங்கள் இப்படித்தான் இருக்கும் ! : பெட்ரோல் விலை உயர்வு குறித்து நிதியமைச்சரின்...

    இன்னும் 5 வருடங்கள் இப்படித்தான் இருக்கும் ! : பெட்ரோல் விலை உயர்வு குறித்து நிதியமைச்சரின் கருத்து

    இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் கடும் விலைவாசி ஏற்றத்தைக் கண்டிருக்கும் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் விலை மேலும் 80 காசுகள் ஏறியுள்ளது. கடந்த ஒன்பது நாட்களில் லிட்டருக்கு 5 ரூபாய் 60 காசுகள் உயர்ந்துள்ளன. 

    மாநில சில்லறை விற்பனையாளர்களின் அறிவிப்புப்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாய் 21 காசுகளிலிருந்து 101 ரூபாய் 1 காசுகளாக உயர்ந்துள்ளது. மேலும், ஒரு லிட்டர் டீசலின் விலை 91 ரூபாய் 47 காசுகளிலிருந்து 92 ரூபாய் 27 காசுகளாக உயர்ந்துள்ளது.

    ஆனால், மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மும்பையில் முறையே 84 மற்றும் 85 காசுகள் பெட்ரோல் மற்றும் டீசலில் விலையேற்றம் நடந்துள்ளது. அங்கு இப்பொழுது விலை பெட்ரோலுக்கு ரூபாய் 115.88 ஆகவும், டீசலுக்கு ரூபாய் 100.10 ஆகவும் உயர்ந்துள்ளது. 

    இந்த விலை ஏற்றம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உள்ளூர் வரிவிதிப்புகளைப் பொறுத்து மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். இந்த விலை விகித திருத்தத்தில் நான்கரை மாத இடைவெளி முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் 22ல் இருந்து இன்று வரை 9 முறை விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதில் முதல் நான்கு முறை 80 பைசா உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் தினசரி விலைத்திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இதன் பிறகு விலை மாற்றத்தில் ஒரு செங்குத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

    இதற்கு மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. பட்ஜெட் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை கடுமையாக எதிர்த்தார். 

    இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்கள் வழக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். அந்த பணத்தை திருப்பி பெறுவதற்காகத்தான் மக்கள் இன்னும் அதிக வரி செலுத்தி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த கடன் பத்திரங்களை முழுவதுமாக மீட்டெடுக்க இன்னும் 5 வருடங்கள் ஆகும் என்று கூறிய அவர், அதுவரை மக்கள் இன்னும் அதிகமாக வரி செலுத்த வேண்டி வரும் கூறியுள்ளார்.

    உலக அரங்கில் கடுமையான விலையேற்றம் ஏற்பட்டபோதும், ரஷ்யா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் பரிவர்த்தனையில் சிறப்பு சலுகை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விலை ஏற்றத்துக்கு மத்திய அரசு விதிக்கும் அதிகப்படியான வரியே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ள நிலையில், காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக தங்களுடைய போராட்டத்தை அறிவித்துள்ளன. 

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....