Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா' அமைப்புக்கு தடையா? காரணம் என்ன?

    ‘பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்புக்கு தடையா? காரணம் என்ன?

    ‘பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு மக்களின் நலனிற்காக செயல்பட்டு வருவதாக தன்னைக் காட்டிக் கொள்கிறது. இந்த அமைப்பு தான் இந்திய நாட்டில் நடக்கும் மதக் கலவரங்களுக்கு முக்கிய காரணமாக பேசப்படுகிறது.

    2007 ஆம் ஆண்டு தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் சமூக நீதியை நிலைநாட்ட ஃபர்ம் பார் டிகினிடி மற்றும் மனித நீதிபாசறை, நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரண்ட் என்ற அமைப்புகள் இணைந்து பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை உருவாக்கியது.  இது மக்களுக்காக செயல்படும் அமைப்பு என்றும், எங்களின் குரல் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இருக்கும் என்றும் கூறுகிறது. இந்த அமைப்பு தான் இந்திய நாட்டில் நடக்கும் மதக் கலவரங்களுக்கு முக்கிய காரணமாக பேசப்படுகிறது. 

    ஆண்டு தோறும் ராம நவமியானது ஏப்ரல் 9 ஆம் தேதி இந்துக்கள் கொண்டாடுவது வழக்கம். அன்று முக்கிய மாநிலங்களான டெல்லி, உத்திர பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகாவில் மதக் கலவரங்கள் உருவெடுத்தன. இதற்கு பின்புறத்தில் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு செயல்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த அமைப்பை விரைவில் தடை செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    கேரளாவில் நடந்த பயங்கர ஆயுத தாக்குதல்களின் பின்னணியிலும் சில முக்கிய மோதல்களின் பின்னணியிலும் இந்த அமைப்பிற்கு சம்மந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கேரள அரசு முன்பே இந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த அமைப்பை தடை செய்யக் கோரி 2018 ஆம் ஆண்டே கேரள அரசு கோரிக்கை வைத்தது. 

    உத்தர பிரதேசத்தில் நடந்த கூட்டு பாலியல் சம்பவத்திலும் இந்த அமைப்புக்கு சம்மந்தம் இருப்பதாக தெரிகிறது. இதனால், உத்திரபிரதேச மாநில அரசும் இந்த அமைப்பை தடை செய்யக் கோரிக்கை வைத்திருந்தது.

    2019 ஆம் ஆண்டு, தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்தது. அப்போதும் இந்த அமைப்பு தனது எதிர்ப்பை தீவிரமாக பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மதக் கலவரங்களை முன்னெடுத்து நாட்டை இரண்டாக பிளக்க இந்த அமைப்பு முயன்று இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விரைவில் இந்த அமைப்பு, சட்டவிரோதங்கள் தடுப்பு 1967 சட்டவிதியின் கீழ் தடை செய்யப்படும் என்று தெரிய வந்திருக்கிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....