Tuesday, May 16, 2023
மேலும்
  Homeசெய்திகள்இந்தியாஅரசியலுக்குத் தாவும் இந்திய கிரிக்கெட் வீரர் : கிளம்பும் எதிர்ப்புகள்

  அரசியலுக்குத் தாவும் இந்திய கிரிக்கெட் வீரர் : கிளம்பும் எதிர்ப்புகள்

  இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக ராஜ்யசபா எம்பி பதவிக்குப் போட்டியிடுவதற்க்காக வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகிறார். 

  இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் அங்கம் வகித்த இவர், அந்தத்தொடருக்குப்பின் பெரிய அளவில் இந்திய அணியில் இடம் கிடைக்காததால் கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய ஓய்வினை அறிவித்தார். அதன்பின்பு, ஐ.பி.எல் போட்டிகளில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பங்கேற்று விளையாடிய சமயத்தில் ட்விட்டரில் தமிழில் ட்வீட்களை பதிவிட்டு தமிழ் மக்களிடையே பிரபலம் ஆனார். பாஜி என்ற பெயரில் மக்களிடையே பிரபலம் அடைந்த இவரை திருவள்ளுவர் என்று மக்களும் நகைச்சுவையோடு அழைத்து வந்தனர். அதன்பின்பு, இணைய தொடர்கள் மற்றும் திரைபடங்கள் என நடித்து வந்த நிலையினில் தற்பொழுது அரசியலில் இறங்கியுள்ளார். 

  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 117 தொகுதிகளில் 92 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. பஞ்சாப்பில் ராஜ்யசபாவிற்கு மொத்தம் 7 பதவிகள் உள்ளன. தற்போது அம்மாநில ராஜ்யசபா எம்பிக்களாக இருக்கும் பாஜகவின் ஷூவைத் மாலிக், சிரோன்மணி, காங்கிரசின் பிரதாப் சிங் பாஜ்வா, எஸ்.எஸ்.துலோ மற்றும் அகாலிதளத்தின் நரேஷ் குஜ்ரால், சன்யுக்த் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையப்போகிறதால், தேர்தல் நடைபெற இருக்கிறது. 

  அங்கு அதிக இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சியினர் தங்களுடைய வேட்பாளர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி ராஜிவ் நகர் தொகுதி எம்.எல்.ஏ ராஜிவ் சத்தா, 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஆம் ஆத்மி கட்சிக்காக பிரச்சாரம் செய்த டாக்டர் சந்தீப் பதக் மற்றும் அந்த கட்சிக்காக பணியாற்றிய அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் அரோரா ஆகியோரை அறிவித்துள்ளது. வேட்புமனுவைத் தாக்கல் செய்த ஹர்பஜன் சிங், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் விளையாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வேன் என்று கூறியுள்ளார். 

  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் கைரா, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிங்,சதா மற்றும் பதக் போன்ற பெயருடையவர்களைத் தேர்ந்தெடுத்து ஆம் ஆத்மி கட்சி பாகுபாடு காட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். சிரோமணி அகாலி தளத்தின்  தலைவர் ஹரிச்சரன் பெயின்சும் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பாகுபாடு காட்டியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பிக்கள் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....