Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாட்டில் தொடரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு!

    நாட்டில் தொடரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு!

    கடந்த நான்கு மாதங்களாக ஒரே நிலையில் இருந்த பெட்ரோல் டீசல் விலை கடந்த வாரம் முதல் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் முன்பே மத்திய அரசு அறிவித்த சுங்கச் சாவடிக் கட்டணமும் இன்று இரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வையே சமாளிக்க கடினப்பட்டு வரும் மக்கள் மேலும், சுங்கச் சாவடிக்கான விலையும் கூடியதால் பெரும் கவலை அடைந்துள்ளனர். 

    வருடா வருடம் ஏப்ரல் 1 ஆம் தேதி சுங்கச் சாவடிக் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம் ஆகும். அந்த நிலையில் 450 க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் இரவு முதலே விலை உயர்வு அமலுக்கு வந்தது. 49 சுங்கச் சாவடிகள் உள்ள தமிழகத்தில் 27 சுங்கச் சாவடிகளில் காலை முதல் 10 சதவிகிதம் கட்டண உயர்வு அதிகரித்துள்ளது. முன்பு இருந்ததை விட 10 முதல் 50 ரூபாய் வரை கட்டணம் செலுத்தப்படுகிறது. 

    அதன்படி இலகு ரக  வாகனங்களுக்கு 5 முதல் 10 ரூபாய் வரையும் பேருந்துகள் மற்றும் ட்ரக்குகள் போன்ற வாகனங்களுக்கு 15 ரூபாய், 4,6,8 அச்சுகள் கொண்ட வாகங்களுக்கு 25 ரூபாய், கனரக வாகனங்களுக்கு 30 ரூபாய் வரையும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டணம் அடுத்த வருடம் மார்ச் 31 தேதி வரை அமலில் இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. 

    இதனால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் சுங்கச் சாவடிக் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் மாநிலத்தில் 60 கிலோ மீட்டருக்குள் உள்ள சுங்கச் சாவடிகளை இன்னும் அகற்றவில்லை என மாநில நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. 

    இதனிடையில் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயுவின் விலை ரூ. 269 அதிகரித்து ரூ. 2406 ஆக விற்கப்படுகிறது.  இந்த விலை உயர்வின் காரணமாக உணவகங்களில் உணவின் விலைகளும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.                                                                                          

    இது ஒரு புறம் இருக்க அத்தியாவசிய மருந்துக்களின் விலையும் 10.7% அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 800 மருந்துகளின் விலை உயர்கிறது. முக்கிய நோய்களான இதய மற்றும் நுரையீரல் சம்மந்தமான நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துக்களின் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகுக்கின்றனர். பணவீக்கம் தான் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் தேசிய மருந்து விலை நிர்ணயிக்கும் ஆணையம்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....