Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இந்தியன்-2 படப்பிடிப்பு இந்த நாட்டிலா?

    இந்தியன்-2 படப்பிடிப்பு இந்த நாட்டிலா?

    நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இணைந்து பணியாற்றிய திரைப்படம்தான் இந்தியன். 1996-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    இதைத் தொடர்ந்து, சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இந்தியன் இரண்டாம் பாகம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு லைகா நிறுவனம் தயாரிக்க ‘இந்தியன்-2’ படபிடிப்பு கமலுடன் ஆரம்பித்தது. பின்னர், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கபட்டிருந்தது.

    அதன் பிறகு, மீண்டும் இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரயிலில் நடக்கும் முக்கியமான சண்டைக் காட்சிக்காக படக்குழுவினர் தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளதாகவும் அங்கு 15 நாள்கள் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது, சென்னையில் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல்: யார் எந்த அணிக்கு கேப்டன்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....