Wednesday, March 22, 2023
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவெற்றிப்பெற்றாலும் குறைகள் பேசு பொருளாய் ஆனது; மீண்டெழும் இந்தியா!

    வெற்றிப்பெற்றாலும் குறைகள் பேசு பொருளாய் ஆனது; மீண்டெழும் இந்தியா!

    தென்னாப்பிரிக்காவில் இந்தியா மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் முடிவாய் தோல்வி அமைய, இந்திய இரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். கோலி அவர்களின் கேப்டன்சி இழப்பு, வீரர்களுக்கு கொரோனா தொற்று என பல இன்னல்களை இந்திய கிரிக்கெட் அணி சந்திக்க, இந்திய இரசிகர்களும் சற்றே ஏமாற்றம் அடைந்தனர்.

    இரசிகர்களின் இந்த ஏமாற்றத்தை போக்கும் வகையில் அமைந்தது, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி.

    india vs westindies

    ஆம்! மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இச்சுற்றுப்பயணத்தில் மேற்கிந்திய தீவுகள், இந்திய அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

    இவற்றில் ஒருநாள் போட்டிகள் நேற்று தொடங்கியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன்படி, மேற்கிந்திய அணி  முதலில் பேட்டிங் செய்தது.

    chahal

    இந்திய பந்துவீச்சாளர்கள் சாஹல், வாஷிங்டன், பிரசித் ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சால் 43.5 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, மேற்கிந்திய அணி! இதனால் 50 ஓவரில் 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. 

    rohit sharma

    கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்க, ரோகித் சர்மா தனது 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்பு களம் காண வந்த விராட் கோலி 8 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். ஒரு பக்கம் நிதானமாக விளையாடிய இஷான் கிஷன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பந்த் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்தியாவிடம் இருந்து ஆட்டம் நழுவ வாய்ப்பு இருப்பதாய் தோன்றியது.

    india won

    ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்பதைப்போல் சூரியகுமார் – தீபக் ஹூடா ஜோடி விளையாடியது.  இந்தியா 28 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

    rohit - chahal

    மேலும், நடைபெற்ற இப்போட்டி இந்திய அணியின் ஆயிரமாவது ஒரு நாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய சாஹல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதோடு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை எடுத்த சாதனையை புரிந்தார், சாஹல்!

    இந்திய அணி வெற்றிப்பெற்றாலும் பீல்டிங்கில் ஆங்காங்கே சொதப்பியதும், பேட்டிங்கில் 4 விக்கெட் வரை சென்றதும் பேசு பொருளாய் ஆனது. இந்திய அணி தன் குறைகளை கலைந்து மீதமுள்ள அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி வாகை சூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...