Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇரண்டாவது ஒரு நாள் போட்டியில், கே எல் ராகுல் மற்றும் தவானின் நிலைமை என்ன?

    இரண்டாவது ஒரு நாள் போட்டியில், கே எல் ராகுல் மற்றும் தவானின் நிலைமை என்ன?

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணி, இந்திய அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

    indian bowlers

    இவற்றில் முதலாவது ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் அசத்தல் பந்து வீச்சால் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.  இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஒரு நாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.  

    இந்நிலையில், இன்று மதியம் ஒன்று முப்பது மணியளவில் இரண்டாவது ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. 

    rohit and pollard

    இந்திய அணியில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது  கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இருவரும் வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டனர். இருப்பினும், இன்றைய போட்டியில் இருவரும் விளையாடுவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.

    மேலும், முதல் ஒரு நாள் போட்டியில் பங்கேற்க முடியாமல் போன கே எல் ராகுல் இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இஷான் கிஷனுக்கு பதிலாக பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    West-Indies-tour-of-India-2022-Schedule-Squads

    இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்) , இஷான் கிஷன் , விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, ஷாருக் கான், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் , அவேஷ் கான், குல்தீப் யாதவ், கே எல் ராகுல்

    மேற்கிந்திய தீவுகள் அணி: ஷாய் ஹோப் , பிராண்டன் கிங், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட்(கேப்டன்), ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், ஃபேபியன் ஆலன், அல்சாரி ஜோசப், கெமர் ரோச், நக்ருமா பொன்னர், ஒடியன் ஸ்மித், ரோமரியோ ஷெப்பர்ட், ஹேடன் வால்ஷ்

    இதையும் படிக்கலாமே; வெற்றிப்பெற்றாலும் குறைகள் பேசு பொருளாய் ஆனது; மீண்டெழும் இந்தியா!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....