Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதோல்வியில் இருந்து மீளுமா மேற்கிந்திய தீவுகள்? தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இரண்டாவது டி20!

    தோல்வியில் இருந்து மீளுமா மேற்கிந்திய தீவுகள்? தொடரை கைப்பற்றுமா இந்தியா? – இரண்டாவது டி20!

    இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது  இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு ஏழு மணியளவில் தொடங்க உள்ளது. 

    India-vs-West-Indies-2nd-ODI-Preview-Will-West-Indies

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருகிறது. ஏற்கனவே ஒரு நாள் போட்டித்தொடரில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்நிலையில், ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது.

    india vs west indies

    இப்படியான சூழ்நிலையில்தான், இன்று இந்தியாவும் மேற்கிந்திய தீவுகள் அணியும்  இரண்டாவது இருபது ஓவர் போட்டியை இன்று விளையாட உள்ளன. இன்றையப் போட்டியிலும் வெற்றிப்பெற்று  இருபது ஓவர் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியோ இன்று வெற்றிப்பெற்றால்தான் தொடரில் நீடிக்க முடியும். இதனால், இன்றைய ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி வீரர்கள்; ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பந்த் (விகீ), சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், தீபக் ஹூடா , ஷ்ரேயாஸ் ஐயர், அவேஷ் கான், முகமது சிராஜ், ருதுராஜ் கெய்க்வாட்

    West-Indies-tour-of-India-2022-Schedule-Squads

    மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள்;  பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன்(விகீ), ரோஸ்டன் சேஸ், ரோவ்மன் பவல், கீரன் பொல்லார்ட்(கேப்டன்), ஒடியன் ஸ்மித், அக்கேல் ஹொசைன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஃபேபியன் ஆலன், ஷெல்டன் காட்ரெல், ஜேசன் ஹோல்டர், டேரன் பிராவோ, ஷாரி பிராவோ ஹோப், டொமினிக் டிரேக்ஸ், ஹேடன் வால்ஷ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....