Tuesday, May 16, 2023
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபிங்க் நிற பந்தில் நாளை தொடங்கவிருக்கும் இறுதி டெஸ்ட்; தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

    பிங்க் நிற பந்தில் நாளை தொடங்கவிருக்கும் இறுதி டெஸ்ட்; தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

    இலங்கை அணியின் சுற்றுப்பயணம் 

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது தொடர்ந்து பரிதாப நிலையிலேயே உள்ளது. இலங்கை அணியானது மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலுமென இந்த சுற்றுப்பயணத்தில் இதுவரை இந்தியாவுக்கு எதிராக விளையாடியுள்ள அத்தனை போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இந்தியா ஒரு பக்கம் பலம் வாய்ந்த அணியாக இத்தொடரில் இருந்து வந்தாலும், இலங்கை அணியும் அதன் தரப்பிற்கு மோசமான அணியாகவே விளங்கி வருகிறது.

    பிங்க் நிற டெஸ்ட் 

    india vs srilanka last testஇச்சுற்றுப்பயணத்தின் இறுதியாக மீதமிருக்கும் ஒரு டெஸ்ட் போட்டியும் நாளை நடைபெற உள்ளது. ஏற்கனவே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அனைவரையும் வியக்க செய்தது.

    இந்நிலையில், நாளை தொடங்கவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் இந்த டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது, பகலிரவு ஆட்டம் என்பதால் பிங்க் நிற பந்து இந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்படும். 

    விறுவிறுப்பு 

    ஒரு வெற்றியையாவது ருசித்து விட வேண்டுமென்று இலங்கை அணியும், முழு வெற்றியையும் ருசிக்க வேண்டுமென்று இந்திய அணியும் நாளை களத்தில் சந்திக்க உள்ளன. பகலிரவு ஆட்டம், இறுதி ஆட்டம் என பல நிகழ்வுகளை அடக்கிய இப்போட்டியானது விறுவிறுப்பாக நிகழ வேண்டுமென்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வண்ணம் உள்ளனர். 

    இரண்டாம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் வீரர்கள்; 

    indian test team

    ரோஹித் சர்மா ( கேப்டன்), மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ரிஷப் பந்த்  , ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல்/ஜெயந்த் யாதவ்/முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....