Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇந்தியா - இலங்கை இடையே ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்து- எதற்காக இந்த ஒப்பந்தங்கள்? 

    இந்தியா – இலங்கை இடையே ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்து- எதற்காக இந்த ஒப்பந்தங்கள்? 

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் அங்குள்ள மக்கள் பஞ்சத்தில் வாடுகின்றனர். அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வால் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் கேள்விக் குறியாகி உள்ளது. மேலும் பொருட்களின் தட்டுப்பாட்டால் மக்கள் பல மணி நேரங்கள் வரிசையில் நின்று காத்துக் கிடக்கின்றனர். 

    இதனிடையில் இலங்கை அரசு இந்திய அரசிடம் ஒரு பில்லியன் டாலரை கடனாக கேட்டது. இதை இந்திய அரசும் ஏற்று கடனையும் வழங்கியது. இதையடுத்து மேலும் ஒரு பில்லியன் டாலரை இலங்கை அரசு இந்திய அரசிடம் கேட்டது. இதற்கிடையே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று 6 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். 

    நயினா தீவு, நெடுந் தீவு, அனலை தீவு மின்திட்ட ஒப்பந்தம்- இந்த ஒப்பந்தத்தின் மூலம் இத்தீவுகளில் சோலார் மற்றும் விண்ட் எனர்ஜி போன்ற மின் திட்டங்கள் செய்து  தரப்படும். மிகவும் முக்கியமாக இலங்கை அரசு ஏற்கனவே சென்ற ஆண்டு இத்திட்டத்தினை சீனாவிடம் ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவான கடன் தரவில்லை, மானியம் அளிக்கிறோம் என்று கூறியதின் விளைவாக இலங்கை அரசு இதற்கு ஒப்புக் கொண்டது. 

    இது மட்டும் அல்லாமல் இந்திய,சீன இடையே முன்பு இருந்து வந்த பிரச்சனைகளால் இந்தியாவின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது. அதோடு தமிழ்நாடு ராமேஸ்வரத்திற்கு மிகவும் அருகில் அம்மூன்று தீவுகளும் இருப்பதால் சீன எப்போது வேண்டுமானாலும் இந்தியாவை தாக்கலாம் என்ற கருத்துக்கள் நிலவி வந்த நிலையில் தற்போது இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு சாதகமாக மாறி இருக்கிறது. இந்த ஒப்பந்தங்களை இலங்கையில் இருக்கும் சீன வெளியுறவுத்துறை அதிகாரி எதிர்த்துள்ளார்.

    கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய ஒப்பந்தம்- இந்த ஒப்பந்தத்தின் மூலம்  அதவாது இந்திய பெருங்கடலில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் ஆளுமை இருக்கும் என்பதால் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சீன அரசின் கட்டுப்பாட்டில் துறைமுகங்கள் இருந்தாலும் கடல் போக்குவரத்து கண்காணிப்பில் இந்தியா செயல்படும் என்பது இதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் கடற்படைத் தளங்களைக் கண்காணிக்க இந்திய சார்பில் மூன்று விமானங்கள் இலங்கை அரசுக்கு வழங்கப்படுகிறது. 

    இந்த ஒப்பந்தங்கள் சீனாவிற்கு பதிலடியாகவும் இலங்கைக்கு உதவியாகவும் இந்தியாவிற்கு பாதுகாப்பாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....