Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசுவிஸ் ஓபனில் மகுடம் வென்றார் பி.வி.சிந்து : பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் படைக்கப்பட்ட சாதனைகள்

    சுவிஸ் ஓபனில் மகுடம் வென்றார் பி.வி.சிந்து : பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் படைக்கப்பட்ட சாதனைகள்

    சுவிஸ் ஓபனின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து அபாரமாக வெற்றி பெற்று பட்டம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான பிரனாய் ஹெச்.எஸ் இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவினார்.

    சுவிஸ் ஓபன் 2022 தொடரானது ஸ்விட்சர்லாந்தில் உள்ள பசேல் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்த தொடருக்கான இறுதிப்போட்டிகள் ஞாயிற்றுக் கிழமையான நேற்று நடைபெற்றன. 

    இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரனாய் ஹெச்.எஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியிருந்தார். மற்றொரு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்துவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். 

    நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி ஆட்டத்தில் உலகின் 7ஆம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 11ஆம் நிலை வீராங்கனையான புசானன் ஓங்க்பாம்ருங்பனைச் சந்தித்தார். 

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-16 என பி.வி.சிந்து எளிதாகக் கைப்பற்றினார். அடுத்த செட்டை 21-8 என இன்னும் எளிதாகக் கைப்பற்றி வெற்றி பெற்றார் பி.வி.சிந்து. 

    இந்த வெற்றியின் மூலம் சுவிஸ் ஓபனில் இரண்டாவது முறையாக மகுடம் சூடுகிறார் பி.வி.சிந்து. இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டில் சுவிஸ் ஓபனில் வெற்றி பெற்று இருந்தார். 

    இதுவரை தாய்லாந்தின் புசானன் ஓங்க்பாம்ருங்பனுக்கு எதிராக 17 போட்டிகளில் விளையாடியுள்ளார் பி.வி.சிந்து. அதில் 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார் பி.வி.சிந்து. கடைசியாக ஹாங்காங் ஓபனில் 2019ஆம் ஆண்டு புசானன் ஓங்க்பாம்ருங்பனிடம் தோற்றிருந்தார். 

    மற்றொரு ஆட்டமான ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் 26ஆம் நிலை வீரர் பிரனாய் ஹெச்.எஸ் மற்றும் இந்தோனேஷியாவின் 8ஆம் நிலை வீரர் ஜோனதன் கிறிஸ்டியைச் சந்தித்தார். 

    இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாய் ஹெச்.எஸ் போட்டியை வெல்லக் கடுமையாகப் போராடினார். ஆனால், உலகின் முன்னணி வீரரான ஜோனதன் கிறிஸ்டியின் ஆட்டத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 21-12 மற்றும் 21-19 என்ற செட்கணக்கில் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறினார். வெற்றி பெற்ற இந்தோனேஷியாவின் ஜோனதன் கிறிஸ்டி சாம்பியன் பட்டம் வென்றார். 

    இந்தத் தொடரின் ஆரம்பத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென் தொடரிலிருந்து விலகி அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினார். இந்நிலையில் இந்தியாவின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் 4 பேர் காலிறுதி வரை முன்னேறி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின்  கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதியில் தோற்று வெளியேறினார். மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் சாய்னா நேவால் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சிக்குள்ளாகினார். இந்திய ஓபனில் பட்டம் வென்றதன் மூலம் இந்தத் தொடரிலும் பட்டம் வெல்வார்கள் என நம்பிக்கையளித்த இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ரெட்டி இணையும் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினார்கள். 

    மற்றபடி அனைத்து இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளும் தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....