Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநம்பிக்கை முதல் ஆன்மிகம் வரை அனைத்து இடங்களிலும் பன்முகத்தன்மை- பிரதமர் மோடி

    நம்பிக்கை முதல் ஆன்மிகம் வரை அனைத்து இடங்களிலும் பன்முகத்தன்மை- பிரதமர் மோடி

    நமது நம்பிக்கை முதல் ஆன்மிகம் வரை அனைத்து இடங்களிலும் பன்முகத்தன்மை காணப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

    சௌராஷ்டிரா-தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி, குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையேயான கலாச்சார பரிமாற்றத்தையும் பாரம்பரியத்தையும் கொண்டாடுவதற்காக முன்னெடுக்கப்பட்டது. 

    இந்நிலையில், குஜராத் மாநிலம், சோம்நாத் நகரில் கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமத்தின் நிறைவு விழா நடைபெற்றது. 

    இந்நிகழ்ச்சியில், காணொளி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி சௌராஷ்டிரா-தமிழ்ச் சங்கமத்தின் நிறைவு விழா மலரை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அந்த விழாவில் பேசிய அவர், நமது நாடு பன்முகத்தன்மை கொண்டது எனவும், வெவ்வேறு மொழிகளை பேசும் மக்கள் வாழும் சிறப்பு வாய்ந்த நாடு எனவும் தெரிவித்தார். 

    மிக கடினமான சூழ்நிலைகளில் கூட புதுமைகளை உருவாக்கும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது. சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கம் போன்ற நிகழ்வுகளும் நாட்டின் ஒற்றுமைக்கு வழிவகுப்பதோடு ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 

    இயக்குநர் ராமின் ‘ஏழு மலை ஏழு கடல்’ படம் குறித்து வெளிவந்த அப்டேட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....