Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதொடர்ந்து உயரும் கொரோனா..

    தொடர்ந்து உயரும் கொரோனா..

    நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கடந்த சில நாட்களாகவே நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 6 மாதங்களில் இல்லாத வகையில் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. 

    கடந்த 24 மணி நேரத்தில் 3,095 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து இருப்பதாகவும், 5 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    தற்போது நாட்டில் 15,208 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்த்தொற்று விதம் தினசரி பாசிட்டிவிட்டி ரேட் 2.61 சதவீதமாக உள்ளது. 

    தில்லி, உத்தர பிரதேசம், மராட்டியம், ஹரியானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அப்பகுதிகளில் கவன எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் அம்மாநில அரஸ்க்ல மாவட்ட மருத்துவமனை நிர்வாகங்களை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. 

    13 ஆண்டு காலமாக தாயின் உடலை மம்மியாக மாற்றி பாதுகாத்த மகன்.. போலந்தில் அதிர்ச்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....