Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபிரேக்கிங் நியூஸ்இந்தியாவுக்கு எதிராக ஒற்றை ஆளாய் போராடிய இலங்கை கேப்டன், ஆனாலும் வாய்ப்பில்லை ராஜா சொன்ன இந்திய...

    இந்தியாவுக்கு எதிராக ஒற்றை ஆளாய் போராடிய இலங்கை கேப்டன், ஆனாலும் வாய்ப்பில்லை ராஜா சொன்ன இந்திய அணி!

    பகலிரவு ஆட்டமாய் நடந்தேறி வருகிறது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி. இந்தியாவில் இலங்கை மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் இதுவரை ஒரு வெற்றியை கூட இலங்கை அணி பதிவு செய்யவில்லை. இப்படியான சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி அல்லது போட்டியை டிராவ் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 

    Cricket Test Match

    ஆனால், போட்டி தற்போது சென்று கொண்டிருக்கும் நிலையை பார்த்தால் டிராவுக்கு கூட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஆம்! இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் அறுபது ஓவர்களிலேயே பத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் மட்டுமே சேர்த்து அதிர்ச்சியளித்தது இந்தியா. ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 92 ரன்கள் சேர்த்தார்.

    indian team

    போட்டி இலங்கை அணி பக்கம் திரும்பி விடுமென்று எண்ணினால், அதில் ஏமாற்றமே மிஞ்சியது. 36 ஒவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே சேர்த்தது இலங்கை அணி. இப்படியான இன்னிங்ஸ் முடிவிலேயே தெரிந்துவிட்டது, இலங்கை அணி இம்முறையும் தோல்வியைத்தான் தழுவும் என்று. 

    இரண்டாம் இன்னிங்ஸ் விளையாட ஆரம்பித்த இந்திய அணி 303 ரன்கள் எடுத்த நிலையில் மீதம் ஒரு விக்கெட் கையில் இருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இதனால் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடியது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியானது 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தனியாளாய் போராடிய இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்ன சதமடித்து அசத்தினார். பெரிய போராட்டங்கள் ஏதுமின்றி மிகவும் எளிமையாக இப்போட்டியை வென்றது, இந்திய அணி! 

    முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியையும், இரண்டாவது டெஸ்டில் 238 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, இலங்கை அணியின் சுற்றுப்பயணத்தையே வொயிட் வாஷ் செய்துள்ளது.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....