Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபிரேக்கிங் நியூஸ்உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் இன்று பலப்பரீட்சை!

    உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் இன்று பலப்பரீட்சை!

    19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 14 வது  உலக கோப்பை  மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிசுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளன.

    இன்று மாலை தொடங்கவிருக்கும் இறுதிப்போட்டிக்கு, இப்போதிலிருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா  இறுதிப் போட்டியில் விளையாடுவது இந்த எதிர்பார்ப்புக்கு மிக முக்கிய காரணமாய் பார்க்கப்படுகிறது.

    world cup

    இதுவரை நடைபெற்ற 14 உலக கோ ப்பை போட்டிகளில் எட்டு முறை இறுதிப் போட்டிகளில் விளையாடி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. 2000ஆம் ஆண்டு முகமது கைஃப் தலைமையில் இந்தியா கோப்பையை வென்றது. 

    2008ல் கோஹ்லி தலைமையில் இரண்டாவது  கோப்பையை வென்றனர், 2012ல் உன்முக்த் சந்த் தலைமையில் மூன்றாவது முறையாக இந்திய அணி வெற்றி உலக கோப்பையை வாகை சூடியது. கடைசியாக 2018ல் பிரித்வி ஷா தலைமையில் இந்தியா உலக கோப்பையை வென்றது. 2020ல் இந்தியா இறுதிப்போட்டிக்யில் வங்கதேசத்திடம் தோற்றது. 

    indian u19 team

    இப்படியான வரலாற்றை 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டியில் இந்தியா வைத்துள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா வென்று மீண்டும் ஐந்தாவது முறை கோப்பையை கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் பரவி இருக்கிறது.

    u19 england playersமறுபக்கம், இங்கிலாந்து அணி இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பையை வென்றுள்ளது. ஆதலால் மீண்டும் உலக கோப்பையை சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தோடு இன்று இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்க இருக்கிறது.

    கடந்த வியாழன் அன்று இந்தியஅணி வீரர்கள், முன்னாள் இந்திய கேப்டனும், 2008 ஆம் ஆண்டு U19 உலகக் கோப்பையை வென்றவருமான விராட் கோலியுடன் வியாழன் அன்று உரையாடியது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....