Wednesday, April 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி; திடீரென விலகிய வங்கதேச கேப்டன்

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி; திடீரென விலகிய வங்கதேச கேப்டன்

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வங்கதேச அணியின் கேப்டன் விலகியுள்ளதாக வங்கதேச அணியின் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. 

    இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது.

    இதன் முதற்கட்டமாக வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி டக்காவில் முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியுள்ளது. இப்போட்டிக்காக, இரு அணி வீரர்களும் தற்போது தயாராகி வருகின்றனர். 

    இந்நிலையில், வங்கதேச அணியின் கேப்டன் தமீம் இக்பால் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். பயிற்சியின்போது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து அவர் விலகியுள்ளதாக வங்கதேச அணியின் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. 

    மேலும், இந்திய அணி தரப்பில் இருந்து ர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்னும் 100% உடற்தகுதியை அடையாத நிலையில் அவர் இந்த தொடர்களில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்திய அணி:

    ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் , ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர் மற்றும் குல்தீப் சென்.

    வங்கதேசம் அணி:

    நஜ்முல் ஹொசைன் சாண்டோ, யாசிர் அலி, ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், அபிஃப் ஹொசைன் துருபோ, எபடோட் ஹொசைன், அனாமுல் ஹக், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம் ( விக்கெட் கீப்பர்) நூர் ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், நசும் அகமது மற்றும் தஸ்கின் அகமது.

    ‘என்னை அழ வைச்சுட்டியே’ என கலைஞர் உருகிய படம்; சத்யராஜ் வியப்பு, தங்கர்பச்சான் உருக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....