Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபிரேக்கிங் நியூஸ்இரசிகர்களுக்கு ஐபிஎல் குறித்து நற்செய்தி சொன்ன கிரிக்கெட் நிர்வாகம் - இரசிகர்கள் ஆறுதல்!

    இரசிகர்களுக்கு ஐபிஎல் குறித்து நற்செய்தி சொன்ன கிரிக்கெட் நிர்வாகம் – இரசிகர்கள் ஆறுதல்!

    பெரும் எதிர்ப்பார்ப்புடன் வரும் 26 ஆம் தேதி இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டி தொடங்க இருக்கிறது. நடைபெற இருக்கும் இருக்கும் 15வது ஐபிஎல் போட்டித் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் பங்கேற்கிறது. 

    இம்முறை ஐபிஎல் தொடரானது பத்து அணிகளுடன் 74 போட்டிகளைக் கொண்டிருக்கும், பெரும்பாலான போட்டிகள் மும்பையின் வான்கடே மைதானம் மற்றும் பிரபோர்ன் மைதானம் மற்றும் நவி மும்பையின் டி.ஒய்.பாட்டீல் மைதானம் மற்றும் எம்.சி.ஏ சர்வதேச மைதானம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. 

    வருகின்ற சனிக்கிழமை நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. ஆனால் பார்வையாளர்கள் குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. 

    ஆம்! இம்முறை நடக்கவிருக்கும் பதினைந்தாவது ஐபிஎல் போட்டியானது பல்வேறு புதிய முறைகளை கொண்டுள்ளது. அவற்றுள் முக்கியமானதாக பார்க்கப்படுவது குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே பல ஐபிஎல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ஐபிஎல் ரசிகர்களை ஏமாற்றும் வகையில் பார்வையாளர்களை மைதானத்திற்குள் அனுமதிப்பது குறித்து தெளிவான தகவல்களை வெளியிடாமல் இருந்தது, இந்திய கிரிக்கெட் நிர்வாகம். 

    இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்க சில நாட்களே உள்ளதால், மைதானத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்த தகவல்களை எதிர்ப்பார்த்து பல ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்பை போக்கும் வகையில் ஒரு அறிவிப்பு இன்று வெளிவந்துள்ளது. 

    வெளிவந்துள்ள அறிவிப்பின்படி, கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக 15வது ஐபிஎல் போட்டித் தொடரில் 25 விழுக்காடு பார்வையாளர்கள் மட்டுமே போட்டியை நேரில் காண மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியானது ஐபிஎல் ரசிகர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. 

    இருப்பினும் 50 விழுக்காடு பார்வையாளர்களையாவது அனுமதித்திருக்கலாம் என்ற எண்ணம் ரசிகர்களிடத்து அதிகமாக காணப்படுகிறது. ஐபிஎல் தொடர் தொடங்கியப் பின் போக போக பார்வையாளர்களின் அனுமதி விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    போட்டி முறைகளில் மட்டும் அல்லாது, அணிகளிலும் பல்வேறு மாறுபாடுகள் நிகழ்ந்து உள்ளதால் 15வது ஐபிஎல் தொடர் எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்வி பரவலாக இருந்து வருகிறது. 

    பங்கேற்கும் அணிகள்: மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....