Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇன்று ஐபிஎல் தொடரில் டபுள் தமாக்கா- ரசிகர்கள் உற்சாகம்; அணிகளின் தகவல்கள் உள்ளே!

    இன்று ஐபிஎல் தொடரில் டபுள் தமாக்கா- ரசிகர்கள் உற்சாகம்; அணிகளின் தகவல்கள் உள்ளே!

    இன்று இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாலை மற்றும் இரவு என இரு வேளைகளில் இரு போட்டிகள் நடப்பது வழக்கம். அப்படியாகத்தான் சனிக்கிழமையாகிய இன்று இரு போட்டிகள் நடைபெற உள்ளன. 

    முதல் போட்டி 

    இரு போட்டிகளில் முதல் போட்டியானது நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடும் இப்போட்டியானது இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

    எப்போதும் போல இம்முறையும் தோல்வியுடனே ஐபிஎல் தொடரைத் தொடங்கியுள்ளது, மும்பை இந்தியன்ஸ் அணி. மறுபுறம் வெற்றியுடன் இந்த ஐபிஎல் தொடரைத் தொடங்கியுள்ளது, ராஜஸ்தான் ராயல்ஸ். 

    ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று வெற்றிப்பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் இன்றையப் போட்டியில் களமிறங்க உள்ளது. ரசிகர்களும் மும்பை அணியிடம் இருந்து இன்று நல்ல ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

    சஞ்சு சாம்சன் தலைமையில் துள்ளலுடன் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிகளுடன் தற்போது இருக்கும் துள்ளலை தக்கவைத்துக் கொள்ள முனைப்புடன் செயல்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    முதல் போட்டியில் விளையாடாத மும்பை அணியின் முக்கிய வீரர் சூர்யகுமார் யாதவ் இந்தப்போட்டியில் விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதியதில் மும்பை அணி 13 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 11 போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது. 

    இரண்டாம் போட்டி 

    இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிக்கொள்ளவிருக்கின்றன. இப்போட்டியானது மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணியளவில் நடைபெற இருக்கிறது. 

    குஜராத் டைட்டன்ஸ் அணியானது கடந்தப் போட்டியில் பெற்ற வெற்றியென்பது  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் ஒருவர் சொதப்பினாலும் இன்னொருவர் சொதப்பலை ஈடுகட்டிவிடுவர் என்ற நம்பிக்கையை கடந்தப் போட்டி குஜராத் டைட்டன்ஸ்க்கு வழங்கியிருக்கிறது. இதனால் எதிரணிகள் ஒருவித கலக்கத்துடனேதான் செயல்படுவர்.

    டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொறுத்தவரையில் விளையாடிய ஒரு போட்டியிலும் வெற்றிப்பெற்றுள்ளது. பெரும்பாண்மையான இளைஞர்களை கொண்ட அணியாக தற்போது டெல்லி கேபிடல்ஸ் விளங்கி வருகிறது.

    கடந்தப் போட்டியைக் கண்டு ஒப்பிடுகையில் டெல்லி அணி பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகப் பார்க்கப்படுகிறது. அக்சர் படேல் பேட்டிங்கில் தன்னை நிறுபித்து வருவது அணிக்கு வலுசேர்க்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 

    குஜராத் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிக்கொள்ளும் போட்டியானது மிகவும் விறுவிறுப்புடன் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....