Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் பிழைத்த குஜராத் டைட்டன்ஸ்!

    ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் பிழைத்த குஜராத் டைட்டன்ஸ்!

    நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில், நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் போட்டியிட்டன. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது வேட், சுப்மன் கில், விஜய் சங்கர் என சிறிய இடைவெளிகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    அணியை சரிவில் இருந்து மீட்டே ஆக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கினார், குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. ஆம்! அதன்படியே, தனது பேட்டிங்கால் வீழ்ந்துக்கொண்டிருந்த குஜராத் அணியை மீட்டார். மறுபுறம் இவருக்கு துணையாக அபினவ் மனோகர் களத்தில் சிறப்பாக தன் பணியை செய்துக்கொண்டிருந்தார்.

    அபினவ் மனோகர் 28 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சஹால் பந்துவீச்சில் அஷ்வினிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின், அதிரடியும் நிதானமும் கலந்து விளையாடிக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவுடன், மில்லர் ஜோடி சேர்ந்தார். 

    இருவரும் அதிரடியை வெளிப்படுத்தியதில், குஜராத் டைட்டன்ஸ் அணியானது இருபது ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.  ஹர்திக் பாண்டியா 87 ரன்களுடனும், மில்லர் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    இதனையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, ராஜஸ்தான் ராயல்ஸ். தொடக்கமும் அப்படியாகவே அமைந்தது. ஷமி வீசிய முதல் ஓவரில் தொடக்கமே அதிரடியாக அமைந்தது. ஆம்! ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி அசத்தினார். 

    அதன்பிறகு, யாஷ் தயால் வீசிய இரண்டாவது ஓவரில் ஆரம்பித்தது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீழ்ச்சி. தேவ்தத் படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு வந்த அஷ்வின் விரைவாக பெவிலியன் திரும்பினார். குஜராத் அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடித்த பட்லர் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.  கேப்டன் சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். 

    இதற்கு பிறகு வந்த அத்தனை வீரர்களும் சொற்ப ரன்களுக்கே பெவிலியன் திரும்ப, ஏற்த்தாழ குஜராத் அணியின் தோல்வி உறுதியானது. இருபது ஓவர்களின் முடிவில், குஜராத் டைட்டன்ஸ் அணியானது 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

    இந்த வெற்றியின் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. இப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருது, குஐராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....