Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் முக்கிய விருதுக்கு தேர்வு!

    தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் முக்கிய விருதுக்கு தேர்வு!

    இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சமூக ரீதியாக பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் தனி நபர் அல்லது ஒரு கூட்டமைப்புக்கு இந்த நாரி சக்தி விருது சர்வதேச மகளிர் தினத்தில் இந்தியக் குடியரசு தலைவரால் வழங்கப்படும்.

    பெருந்தொற்றின் காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சர்வ தேச மகளிர் தினமான இன்று நடைபெறுகிறது. 

    இதில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் விருதுகளைப் பெற தேர்வாகி உள்ளனர். 2020 ஆண்டில் 14 விருதுகள் 15 பேருக்கு வழங்கப்படுகிறது. இதில் ஜெய முத்து (கைவினைக் கலைஞர்) மற்றும் தேஜ்மா (கைப்பின்னல் கலைஞர்) இருவரும் இணைந்து விருதினைப் பெறுகின்றனர். 2021 ஆம் ஆண்டு பட்டியலில் 14 விருதுகளில் மனநல மருத்துவர் தாரா ரங்கசாமி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    2020 ஆம் ஆண்டுக்கான இவ்விருத்தைப் பெற இருப்பவர்கள் தொழில் முனைவோர், வேளாண்மைத் துறை, சமூக நலன், கலைகள், கைவினைகள் போன்ற துறைகள் மூலம் பெண்கள் சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் ஆவர்.  மேலும்  2021 ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற இருப்பவர்கள் தொழில் முனைவு, கல்வி, இலக்கியம், கடல் வணிகம், மொழியியல் போன்ற துறையில் ஈடுபட்டு பெண்கள் நலன் மற்றும் சமூக நிலையை உயர்த்தும் பணிகளில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

    பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாக சிறந்ததொரு சமுதாயத்தை ஆக்கும் பொருட்டு இம்மாதிரியான சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இன்னும் எத்தனையோ பெண்கள் விருதுகள் இன்றியும் பாராட்டுக்கள் இன்றியும் சமூக வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதிரியான விருதுகள் வழங்கப் பட்டால் பெண்களின் ஊக்கமும் ஆர்வமும் இன்னும் கூடும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....