Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஐஐடி பாலக்காடு அறிவித்த புதிய அறிவிப்பு: மகிழ்ச்சியில் வலை வடிவமைப்பாளர்கள்!

    ஐஐடி பாலக்காடு அறிவித்த புதிய அறிவிப்பு: மகிழ்ச்சியில் வலை வடிவமைப்பாளர்கள்!

    ஐஐடி பாலக்காடு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் வலை வடிவமைப்பாளர்களுக்கு(web designer) போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    பாலக்காடு இந்திய தொழில்நுட்ப நிறுவனம், பாலக்காடு தேசிய இணையதளத்தில் புதிய போட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் வலை வடிவமைப்பாளர்களுக்கென வலை வடிவமைக்கும்(web designing) தனி போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய வலை வடிவமைப்பாளர்களும் அனுபவம் உள்ளவர்களும் கலந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கலந்து கொள்பவர்கள் ஐஐடி பாலக்காடுவிற்கு ஒரு தனித்துவமான இணையதளத்தை அமைத்து தர வேண்டும் என்றும் துறைக்கு என தனி இணையதளத்தை அமைத்து தர வேண்டும் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

    வடிவமைப்புகளை அனுப்ப வேண்டொய்ய கடைசி நாள் ஜூலை 24 ஆம் தேதி மாலை 5 மணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழைவாக சேர்த்தும் இந்த வடிவமைப்பை அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு குழுவில் மூன்று நபருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    இந்தப் போட்டியில், வெற்றிபெறுவர்களுக்கு பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. முதல் பரிசு பெறுபவருக்கு ரூ. 30,000 வழங்கப்படும் என்றும் இரண்டாம் பரிசு பெறுபவருக்கு ரூ. 15,000 வழங்கப்படும் என்றும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது ஐஐடி பாலக்காடு. மேலும் வென்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் விருப்பங்களை design@iitpkd.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஐஐடி பாலக்காடு நிர்வாகம் எடுக்கும் முடிவுகளே இறுதியானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    பாலக்காடு இந்திய தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட போட்டியில் கலந்துக் கொள்ள மாணவர்கள் பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர். வளர்ந்து வரும் தொழிலில் மாணவர்களை ஈடுபடுத்தவும் ஆர்வத்தை தூண்டவும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் இவ்வாறு செய்கிறது என்று தெரிகிறது.

    டாடா நிறுவனம் அறிமுகம் செய்யும் புதுவகை எலக்ட்ரிக் கார் ; வியக்க வைக்கும் முக்கிய அம்சங்கள் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....