Monday, March 18, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புநோன்பு திறக்கும்போது பானத்தை இப்படி ஜில்லுனு செய்து குடித்துப் பாருங்கள்!

    நோன்பு திறக்கும்போது பானத்தை இப்படி ஜில்லுனு செய்து குடித்துப் பாருங்கள்!

    நோன்பு திறக்க எப்போதும் ஜூஸ், தண்ணீர் தான் குடிப்போம். தினமும் குடிப்பதால் அவை நமக்கு சலித்துவிடும். மிகவும் வித்தியாசமான சுவையான கோடைக்கு ஏற்ற பானத்தை செய்து குடிக்கலாம் வாருங்கள். 

    தேவையான பொருள்கள்: 

    1. பால் – இரண்டு கப் 
    2. சர்க்கரை- ஐந்து மேசைக்கரண்டி
    3. பூஸ்ட்- மூன்று மேசைக்கரண்டி 
    4. கடற்பாசி- 100 கிராம் 
    5. ஜவ்வரிசி- 50 கிராம் 
    6. காஃபி தூள்- ஒரு தேக்கரண்டி 
    7. தண்ணீர்- தேவையான அளவு 

    செய்முறை: 

    • ஒரு பாத்திரத்தில் ஒன்று முதல் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். சின்ன துகளாக நொறுக்கிய கடற்பாசியை சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பூஸ்ட்டிற்கு பதிலாக வீட்டில் உள்ள காம்பிளான் அல்லது மைலோ போன்றவற்றை வைத்தும் செய்யலாம். 
    • கடற்பாசி கரைந்ததும், இரண்டு மேசைக்கரண்டி பூஸ்ட், மூன்று மேசைக் கரண்டி சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். மேலும் அதில் ஒரு தேக்கரண்டி காஃபி தூளை சேர்த்து கலந்துவிட வேண்டும். அதன்பின்னர் ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கி வைத்து ஆறவிட வேண்டும். 
    • ஆறியவுடன் கடற்பாசித் தண்ணீரை பிரிட்ஜில் ஃபிரீஸரில் வைக்க வேண்டும். இதற்கு மூன்று மணி முதல் நான்கு மணி நேரமாகும். 
    • ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • காய்ச்சிய இரண்டு டம்ளர் பாலில், பூஸ்ட் ஒரு மேசைக்கரண்டி, இரண்டு மேசைக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்துவிட வேண்டும். பின்பு சிறிது நேரம்  பிரிட்ஜில் வைத்து எடுத்துக் கொண்டால் குளிர்ச்சியாக இருக்கும். 
    • குளிர்ச்சியான பாலில், வேகவைத்து எடுத்த ஜவ்வரிசியை சேர்க்க வேண்டும். நன்கு கலக்கியதும் பிரீஸரில் வைத்த கடற்பாசியை துண்டு துண்டாக வெட்டி இதில் சேர்க்க வேண்டும். நீங்கள் விருப்பப்பட்டால் உங்களுக்கு ஏற்றார்ப்போல் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம். 
    • அவ்வளவு தான். இந்த பானம் நோன்பு திறக்க நல்ல சுவையான போதுமான நீராகாரமாக இந்த கடற்பாசி பானம் இருக்கும். 

    இந்த வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான உணவு, இப்படி செய்து சாப்பிடுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....