Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவாழ்வியல்உங்கள் மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டியவை?

    உங்கள் மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டியவை?

    அன்றாடம் நாம் செய்யும் வேலைகளில் கடினமாக சிந்தித்துக் கொண்டிருப்பதால் நம் மனம் ( mind ) சோர்வடையும் நிலைக்கு செல்கிறது. அதிலிருந்து எப்படி வெளியே வருவது என இங்கே பார்ப்போம்.

    • சரியான இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுதல் உங்கள் மன நிலையை சற்று மாற்றும். மூளை மிக கடினமான சிந்தனைகளில் இருந்து சற்று ஓய்வு நிலைக்கு திரும்பும்.
    • உங்கள் மனதை அமைதி படுத்த முயற்சிப்பது ஒரு முக்கியமான செயல். எடுத்துக்காட்டாக நீங்கள் உங்கள் மூச்சிக் காற்றை சுவாசிக்கும் போது மெதுவாக   உள்ளிழுத்து வெளியிடுவது நன்று. இது உங்கள் மனதை திசை திருப்பவும் அமைதி நிலையில் வைத்திருக்கவும் உதவும். மேலும் தியானம், யோகா, உடற்பயிற்சி refresh your mindபோன்றவைகளிலும் ஈடுபடலாம்.
    • உங்களுக்கு பிடித்த இசைகளைக் கேட்பது மனதை ஒருநிலைப் படுத்தி ஒரே சிந்தனையில் வைத்திருக்கும். இது உங்களுக்கு புத்துணர்வையும் தரும்.
    • சிறிது நேரம் எந்த வித யோசனையும் இல்லாமல் சிறந்த நகைச்சுவை கலந்த கதைகளை பார்க்கவும் கேட்கவும் செய்யலாம்.
    • புத்தகம் வாசிப்பது கவனத்தை மாற்றும் மேலும் அது மனதை அமைதிப்படுத்தும்.
    • உங்களுக்கு பிடித்த இடத்திற்கு நடந்து செல்வதும் உங்களுக்கு பிடித்த நபருடன் பேசுவதும் உங்கள் மனதை புதுப்பித்து நல்ல எண்ணங்களைத் தூண்டும்.
    • சமூக வலைத்தளங்களில் இருந்து சற்று வெளியே வந்து ஓய்வு எடுப்பதும் உங்கள் மன நிலையைச் சீராக்கும்.
    • ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்யாமல் வேறு ஏதேனும் வேலையைச் செய்யலாம் அல்லது கடினமான வேலையிலிருந்து சுலபமான வேலைகளை செய்வதாலும் மனநிலை சற்று மாறும்.
    • சீரான தூக்கம் உங்களை இன்னும் புத்துணர்வோடு செயல்பட வைக்கும்.

    மனம் தினம் இரண்டும் உங்கள் கைகளில் அதை உங்கள் விருப்பம் போல் செயல்படுத்துங்கள்! 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....