Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்கோடைகால வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியம் இதோ!

    கோடைகால வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியம் இதோ!

    கோடைகாலத்தில் பொதுவாக பலருக்கு வறட்டு இருமல் வரக் கூடும். காரணம், கால நிலை மாற்றம் தான். ஆனால், சிலருக்கு தொண்டை மற்றும் சுவாசக் குழாய் பிரச்சனைகள், சைனஸ், ஆஸ்துமா போன்றவை இருந்தால் கூட வறட்டு இருமல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இப்போதெல்லாம் இருமல் என்றாலே கொரோனாவாக இருக்குமோ என்ற பயம் பலரிடையே உள்ளது. அப்படி நினைப்பது தான் தவறான சிந்தனை, எந்த ஒரு உடல் பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் முடிந்த அளவு வீட்டு வைத்தியம் அல்லது தேர்ந்த மருத்துவர்களை அணுகுதல் அவசியம்.

    இங்கே கோடைக் கால வறட்டு இருமலுக்கு வீட்டிலே எப்படி வைத்தியம் பார்ப்பதென்று பார்க்கலாம்.

    dry cough

    • ஒரு தும்பா (டம்ளர்) பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து இரவு தூங்கும் போது குடித்து வந்தால் படிப் படியாக வறட்டு இருமல் குறையும்.
    • நீங்கள் தேநீர்க் குடிப்பவராக இருந்தால் சிறிதளவு இஞ்சி, புதினா இரண்டையும் சேர்த்து டீ வைத்துக் குடிக்கலாம்.
    • பால், கருப்பட்டி, மிளகு, இஞ்சி போன்றவற்றைப் பயன்படுத்தி தேநீர்ப் போன்று வைத்துக் குடிக்கலாம்.
    • வறட்டு இருமல் குணமாக மிக முக்கியமானது தேனும் துளசியும், இவற்றைக் காலையில் எழுந்ததும் வெறும் வாயில் இட்டும் மென்றும் விழுங்கலாம்.
    • வெற்றிலையையும் மிளகையும் இடித்து அதன் சாற்றைக் குடிக்கலாம். vetrilai milagu

    வறட்டு இருமல் வராமல் இருக்க,

    • வறட்டு இருமல் வராமல் இருப்பதற்கு முதலில் நாமும் நம்மைச் சுற்றி இருக்கும் இடத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    • தொடர் சுவாசப் பிரச்சனைகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
    • மூக்கின் தூவாரங்களை சரியான முறையில் சுத்தம் செய்தல் அவசியம். ஏனென்றால், மூக்கில் பிரச்சனை இருந்தாலே அது தொண்டை வரைச் செல்லும். சிலருக்கு சோப்பு சில வகையான ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். ஆதலால், சரியான சோப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
    • நீங்கள் பயன்படுத்தும் பொருள்களை தூய்மையாக வைத்திருத்தல் அவசியம்.

    உங்கள் சுகாதாரமே இங்கு பொதுச் சுகாதாரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....