Sunday, March 17, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்தாய்மையடைய தயாராவது எப்படி?

    தாய்மையடைய தயாராவது எப்படி?

    ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் தாய்மை என்பது இனிதான ஒரு அனுபவம். இன்றைய காலக்கட்டத்தில் இதனை ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும். எல்லோருக்கும் எளிதில் கிட்டிவிடுவதில்லை. அத்தகைய மகத்தான தாய்மையை அடைய எப்படி தயாராக வேண்டும்? கர்ப்பம் தரிக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை? செய்ய வேண்டியவை எவை? என்பதை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

    1. திருமணம் முடிந்ததும் தம்பதியர் செய்ய வேண்டிய முதல் வேலை மருத்துவர்களை அணுகுவது தான். தம்பதியர் இருவருமே தங்களை முழுவதுமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெண்கள் தைராய்டு, ஹைப்பர், ஹைப்போ தைராய்டு, கருப்பை நீர்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து குறையிருந்தால் சிகிச்சை பெறுவது குறித்து மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். ஆண்கள் பரிசோதனைகளையும் சேர்த்து சிகிச்சை தேவைப்படுமா என்பதையும் கலந்து ஆலோசிக்கவும்.

    இருவருக்கும் சிகிச்சை தேவையில்லை ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்னும் போது கருத்தரிப்பு விரைவாக இருக்கும். இருவரில் ஒருவருக்கு சிகிச்சை தேவைப்பட்டாலும் முன்கூட்டியே நீங்கள் அணுகுவதால் சிகிச்சை விரைவில் பலனளிக்கும்.

    2.கர்ப்பமாவதற்கு, சரியான மாதவிடாய் சுழற்சி இருக்க வேண்டும். அவ்வாறு சரியான மாதவிடாய் சுழற்சி இல்லாமல் இருந்தால், அது இனப்பெருக்க மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மாதவிடாய் சுழற்சியை சீராக வைப்பதற்கு, அதற்கேற்ற உணவுகளை முதலில் சாப்பிட வேண்டும்.
    கர்ப்பமடைவதற்கு ஓவுலேசன் (ovulation )தான் சரியான நேரம். எனவே விரைவில் கர்ப்பமடைய வேண்டுமெனில், ஓவுலேசன் நாட்களை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முயற்சி செய்தால், நிச்சயம் கர்ப்பமடைய முடியும்.

    3. உடல் நிறை குறியீட்டெண் என்று அழைக்கும் பிஎம் ஐ பற்றி தெரியுமா? இது உங்கள் உடல்நிலையில் கணக்கிடப்படும் . உங்கள் பிஎம்ஐ அதிக எடை அல்லது அதிக பருமனாக இருந்தால் உடல் எடையை குறைப்பதற்கான விஷயங்கள் குறித்து மருத்துவரிடம் பேசுங்கள். எடை குறைவாக இருந்தாலும் மருத்துவரிடம் பேசுங்கள்.

    4. அமைதியான சூழல் கர்ப்பத்தை ஊக்குவிக்கும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து கவலை கொள்ளாமல் கர்ப்பத்தை மட்டும் எதிர்நோக்கியிருங்கள். மனதை அமைதிப்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.மேலும் தூக்கமின்மை மோசமானது. கர்ப்பகாலத்தில் தூக்கமின்மை என்பது பொதுவானது. ஆனால் கருத்தரிப்பதற்கு முன்பு ஆழமான தூக்கத்தை பெற முயற்சி செய்யுங்கள்.

    5. குறைந்தது 0.4 மில்லிகிராம் பாலிக் அமிலம் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாது சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பாலிக் அமிலம் பிறப்பு குறைபாடுகளை போக்க உதவும். குறிப்பாக இது குழந்தையின் முதுகு தண்டை பலப்படுத்த உதவும். பாலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள உணவை அதிகம் எடுத்துக் கொண்டால், கருவுறும் வாய்ப்பு அதிகமாகும். குறிப்பாக வைட்டமின் A, D, E மற்றும் K நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    6.மேலும் பெண்கள் முற்றிலும் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்க வேண்டும். இது உங்கள் கர்ப்பப்பை மற்றும் மாதவிடாய் போன்றவற்றை பாதிக்கக் கூடும். இதனால் உங்கள் கருவுறும் விகிதம் குறையக் கூடும். அதனால், கடுமையான உடற்பயிற்சிகளை தவிர்த்து, பாதுகாப்பான பயிற்சிகளை செய்வது நல்லது. ஆரோக்கியமான இயற்கை முறையிலான உணவுகளை உண்ணுங்கள். முடிந்தளவு வீட்டில் தயாரிக்கும் உணவுகளை உண்ண பழங்குங்கள்.

    கணவன் ,மனைவியாய் கைகோர்த்து நடந்து செல்லுதல் .மனம் விட்டு பேசுதல்..மகிழ்ச்சியாய் ..கவலை மறந்து ..புரிந்துகொண்டு வாழுங்கள் . சீக்கிரம் குழந்தை வரம் கடவுள் அருளால் கிடைக்கும் .

    சருமத்தின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் ரோஸ் வாட்டர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....