Tuesday, March 21, 2023
மேலும்
    Homeசமையல் குறிப்புசுவையான மொறு மொறு உருளைக்கிழங்கு சீவல் இப்படி செய்து கொடுங்க!

    சுவையான மொறு மொறு உருளைக்கிழங்கு சீவல் இப்படி செய்து கொடுங்க!

    உருளைக்கிழங்கு சிலருக்கு அதிகம் பிடிக்கும் அதுவும் சிறார்களுக்கு மிகவும் பிடித்தது. பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு இப்படி சுவையாக மொறு மொறுனு செய்து கொடுத்து பாருங்கள்.

    தேவையான பொருள்கள்:

    • உருளைக்கிழங்கு- மூன்று 
    • சோள மாவு – மூன்று தேக்கரண்டி 
    • மைதா மாவு – இரண்டு தேக்கரண்டி 
    • அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி 
    • சிவப்பு மிளகாய்த் தூள் – முக்கால் தேக்கரண்டி 
    • கர மசாலா தூள் – அரை தேக்கரண்டி
    • பெருங்காயத் தூள்- ஒரு சிட்டிகை 
    • எண்ணெய், உப்பு, தண்ணீர்- தேவையான அளவு 

    செய்முறை:

    • உருளைக்கிழங்கை தோல் உறித்து வட்ட வட்டமாக வெட்டி பின்பு வாள் வாளாக வெட்டி உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். 
    • பிறகு ஊறவைத்த உருளைக்கிழங்கை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.
    • தண்ணீர் இன்றி, பிறகு ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, சோள மாவு, மைதா மாவு, அரிசி மாவு, சிவப்பு மிளகாய்த் தூள், கர மசாலா தூள், பெருங்காயத் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து, உருளைக்கிழங்கில் மசாலா பொருள்கள் ஒட்டும் வரை நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
    • பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானதும் மசாலாவில் ஒட்டிய  உருளைக்கிழங்கை எண்ணெய்யில் தூவி பொரித்து எடுத்தால் சுவையான மொறு மொறு உருளைகிழங்கு சீவல் தயார். 

    சத்து: உருளைக்கிழங்கு நார்ச்சத்து மிக்கது. இது உங்களின் எடையை குறைக்க உதவி செய்யும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...