Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புஇந்த வெயிலுக்கு தர்பூசணியை இப்படி செய்து குடித்து பாருங்கள்!

    இந்த வெயிலுக்கு தர்பூசணியை இப்படி செய்து குடித்து பாருங்கள்!

    தர்ப்பூசணி மொஜிடோ மிகவும் சுவையான பழரசம், குடிக்க நன்றாக இருக்கும் இந்த கோடைகாலத்தில், வாருங்கள் செய்யலாம்.

    தேவையான பொருள்கள்:

    • தர்பூசணி பழம் – 300 கிராம் 
    • சர்க்கரை- 2 தேக்கரண்டி 
    • எலுமிச்சை பழம் – 1
    • புதினா- 10 இலைகள்  
    • சோடா- 3 மேசைக் கரண்டி 
    • ஐஸ் கட்டிகள்- 5 
    • உப்பு – ஒரு சிட்டிகை

    செய்முறை:

    • ஒரு பாத்திரத்தில் தர்பூசணிப் பழத்தை சதுரம் சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் பாதி எலுமிச்சை பழத்தை சிறிது சிறிதாக வெட்டி அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் புதினா இலைகளை சேர்த்து நன்கு மத்தை வைத்தோ அல்லது கரண்டியை வைத்து அழுத்தம் கொடுத்து சாறு கசியும் வரை செய்ய வேண்டும்.
    • பிறகு ஒரு கண்ணாடி குவளையில் உப்பு, ஐஸ் கட்டிகளை சேர்த்து அதில் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் சாறும் பழமும் கலந்த கலவையை சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும். பின்னர், மீதி பாதி எலுமிச்சை பழத்தை எடுத்து மெலிதாக வெட்டி அதில் சேர்க்க வேண்டும்.
    • இப்போது குவளையின் பாதி அளவை விட சற்று அதிகமா இருக்கும் அப்போது இன்னும் சிறிது சதுர வடிவான தர்பூசணிப் பழங்களை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது குவளை ஓரளவு முழுமையாக இருக்கும் சமயத்தில், சோடா நீரை சேர்த்துக் கொண்டால் போதும். நீங்கள் அந்தக் குவளையை அலங்கரிக்க விரும்பினால் தர்பூசணிப் பழத்தை சிறிது அறுத்து அதன் ஓரத்தில் செருகி வைக்கலாம். அவ்வளவு தான் சுவையான தர்பூசணி மொஜிடோ தயார்.
    • ஒரு கிளறி கிளறியப் பின் அருந்திப் பாருங்கள். வெயில் காலத்தில் தினமும் குடிக்கத்தான் போகிறீர்கள்!
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....