Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புஉங்களுக்கு பருப்பு உசிலி செய்யத் தெரியுமா? எண்ணெய் சேர்க்காமல் இப்படிச் செய்து பாருங்கள்!

    உங்களுக்கு பருப்பு உசிலி செய்யத் தெரியுமா? எண்ணெய் சேர்க்காமல் இப்படிச் செய்து பாருங்கள்!

    நம் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான காய்கள் வைத்து செய்யக் கூடியது தான் இந்த பருப்பு உசிலி. மிகவும் ருசியாக இருக்கும் என்று நண்பர்கள் கூறுவார்கள். சமைத்து சாப்பிட்ட பின் தான் தெரிந்தது அவர்கள் கூறியது உண்மை என்று, உசிலியை இப்படிச் செய்து பாருங்கள்…

    தேவையான பொருள்கள்:

    • கடலைப் பருப்பு – முக்கால் கப் 
    • துவரம் பருப்பு- அரை கப் 
    • பச்சை மிளகாய்- 4 steaming paruppu usili
    • பெருங்காயத் தூள்- அரைத் தேக்கரண்டி 
    • கடுகு- கால் தேக்கரண்டி
    • கருவேப்பில்லை- சிறிதளவு 
    • ஒரு வகை காய் பொடியாக நறுக்கியது
    • உப்பு, தண்ணீர் தேவையான அளவு.

    செய்முறை:

    • கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு நன்கு தண்ணீர் இன்றி வடித்து எடுத்து அத்துடன் பச்சை மிளகாய் உப்பு பெருங்காயத் தூள் மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். 
    • அரைத்ததை உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். 
    • அந்த உருண்டைகள் வெந்த பிறகு ஆறியவுடன் அதை மீண்டும் உதிரி ஆகும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.
    • அந்த ஒரு வகை காயை எடுத்து ஒரு குக்கரில் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். beans paruppu usili
    • பிறகு அரைத்து வைத்த அந்த உதிரியான பருப்பை இந்த காயுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். 
    • பிறகு கடுகு, கருவேப்பில்லை இரண்டையும் வெறும் கடாயில் பொறித்து எடுத்து அதில் தூவி விட்டால் போதும் சுவையான நறுமணமான தென்னகத்து பருப்பு உசிலி தயார். 
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....