Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புமுருங்கைக் கீரைப் பொரியலை இப்படிச் செய்து பாருங்கள்!

    முருங்கைக் கீரைப் பொரியலை இப்படிச் செய்து பாருங்கள்!

    முருங்கைக் கீரையில் தேங்காய் சேர்த்து செய்து தானே பார்த்திருப்பீர்கள். தேங்காய் சேர்ப்பது சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, இங்கே வேர்க்கடலையைப் பயன் படுத்தி எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

    தேவையான பொருள்கள்:

    • முருங்கை கீரை மூன்று கைப்பிடியளவு 
    • வேர்க்கடலை வறுத்தது 100 கிராம்
    • காய்ந்த மிளாகாய் நான்கு 
    • ஐந்து பல் பூண்டு
    • உளுத்தம் பருப்பு அரை தேக்கரண்டி
    • கடலைப் பருப்பு அரைத்  தேக்கரண்டி 
    • கடுகு கால் தேக்கரண்டி
    • கருவேப்பில்லை சிறிதளவு 
    • எண்ணெய், உப்பு, தண்ணீர் தேவையான அளவு

    செய்முறை:

    1. ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கருவேப்பில்லை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்க வேண்டும்.
    2. பிறகு சுத்தம் செய்து வைத்த முருங்கை கீரையை அதில் சேர்க்க வேண்டும். பிறகு சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மூடவேண்டும், குறைந்த தீயில் ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.
    3. அதே சமயம் வேர்க்கடலை வறுத்தது, பூண்டு, காய்ந்த மிளாகாய் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
    4. கீரை முக்கால் பாதியாக வெந்திருக்கும் நிலையில் அரைத்து வைத்ததை  (வேர்க்கடலை,மிளகாய், பூண்டு) சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும். 
    5. அவ்வளவு தான் மக்களே! சுவையான முருங்கைக் கீரை வேர்க்கடலைப் பொரியல் தயார்!
    6. சாதம், சாம்பார், முருங்கைக் கீரை வேர்க்கடலைப் பொரியல் இவை மூன்றும் சிறந்த சேர்க்கை!

    சத்து: இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக் கீரையை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....