Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்மகளிர்ஒரு ஆண் உங்களை விரும்புகிறார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இங்கே பாருங்கள்…

    ஒரு ஆண் உங்களை விரும்புகிறார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இங்கே பாருங்கள்…

    ஒரு ஆண் உங்களை(பெண்ணை) விரும்புகிறார் அல்லது காதலிக்கிறார் என்பதை எப்படி தெரிந்துக் கொள்ள முடியும்? அதற்கு இந்தப்பதிவு உங்களுக்கு நிச்சயம் உதவும். வாருங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

    • உண்மையாகவே, ஒரு ஆண் உங்களை விரும்புகிறார் என்றால் அவர் நிச்சயம் உங்களின் கண்ணை கவனித்து தான் உங்களிடம் பேசத் தொடங்குவார் அல்லது உங்களின் கேள்விக்கு பதில் அளிப்பார். 
    • உண்மையாகவே உங்களை நேசிக்கும் ஆண், உங்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி சர்வ சாதாரணமாகத் தான் தன்னை உங்கள் முன் காண்பித்துக் கொள்வார். 
    • நிச்சயம் அவர், உங்களிடம் பொறுமையைக் கடைப்பிடித்தார் என்றால், உங்களின் மீது அவருக்கு விருப்பம் அதிகம் என்று நம்பலாம். அது, நீங்கள் பேசும் போதும் சரி இல்லை, கோபப்படும்போதும் சரி எந்த சூழ்நிலையிலும், அவர் பொறுமையாக இருந்தார் என்றால் அதுதான் அர்த்தம். 
    • நீங்கள் அவருடன் இருக்கும் போது பாதுகாப்பாக உணர்ந்தீர்கள் என்றால், நிச்சயம் அவர் உங்களை விருப்புகிறார், என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள். 
    • அதுமட்டுமின்றி, அவர் யார்மீதும் காட்டாத மிகுந்த அக்கரையைக் உங்களின் மேல் காட்டுவார் என்றால்,  நிச்சயம் அவர் உங்களை விரும்புகிறார் என்பதைப் புரிந்துக் கொள்ளலாம். 
    • நீங்கள் எப்படி இருக்கின்றீர்களோ, அப்படியே அவர் உங்களை ஏற்றுக் கொள்ள நினைப்பார். நீங்கள் செய்யும் செயல்களை ஊக்குவிப்பார். உங்களையும் உங்களின் ஆசைகளையும் எந்த விதத்திலும் தடுக்க மாட்டார். இருப்பினும், அவருக்கு அது பிடிக்கவில்லை என்பதை காட்டலாம். ஆனால் இதை நீ செய்யக் கூடாது என்று தடுத்து நிறுத்தவே மாட்டார். 
    • உங்களை விரும்பும் ஆண், தன்னை பற்றி யாருக்கும் தெரியாத அல்லது சோகமான பக்கங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வார். யாருக்குமே தெரியாத அவரைப் பற்றிய விடயங்கள் உங்களுக்கு மட்டும் தெரிய வந்தால் அப்போதே சுலபமாக தெரிந்துக் கொள்ளலாம் அவர் உங்களின் மீது நாட்டம் காட்டுகிறார் என. 
    • நீங்கள் பிறரிடம், நெருங்கி பேசினாலோ அல்லது அதிகம் பேசினாலோ அவருக்கு பிடிக்காது. நீங்கள் அவரிடம் மட்டும் தான் அதிகம் பேச வேண்டும் என்று நினைப்பார். 
    • உங்களை விரும்பும் ஆணிடம், நீங்கள் பொய்யே கூறினாலும், அது பொய் என்று தெரிந்தும் நம்ப நினைப்பார் அப்படி, நடந்துக் கொண்டால் நீங்கள் சுலபமாக தெரிந்துக் கொள்ளலாம். 
    • முக்கிய விடயமாக, அவர் உங்களை விரும்புகிறார் என்றால், குறிப்பாக அவர் சுற்றியுள்ள முக்கியமான நபர்களுக்கு உங்களைப் பற்றி சொல்லுவார் அல்லது உங்களை அறிமுகப்படுத்துவார். இதை வைத்தும் நீங்கள் முடிவு செய்துக் கொள்ளலாம்.  
    • மிக முக்கியமான விடயம், உங்களின் உள்ளுணர்வு சொல்லும் உங்களை விரும்பும் ஆண் உங்களை நேசிக்கிறார் என்றும் அவர் உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி செலவிடுகிறார் என்றும், அப்படி உணர்ந்தீர்கள் என்றால் நிச்சயம் அந்த ஆண் உங்களைத் தான் காதலிக்கிறார் என்பதைப் புரிந்துக் கொள்ளலாம். 
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....